பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை 75 இந்துக்களே கோவிலைக்கட்டி, விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமென்றும், அங்குள்ள பூசாரிகளும் சாதிபேத மற்றவர்களென்றும், ஆகமங்களே சாதி வித்தியாசம் பாராட்ட வில்லையென்றும் கண்டோம். இந்தக்கோவில்களுக்குள்ளிருக் கும் சாதிபேதமற்ற நாயன்மார்களுக்குப் பூஜை செய்யப்படுகின் றது. ஆகவே, ஆகம முறையைத் தழுவிய கோவில்களில் நுழைவதற்கோ வணங்குவதற்கோ யாதொரு விதமான சாதி வித்தியாசமும் பாராட்டப்படவில்லை. ஆகமங்களை உண்மை யாக உணர்ந்தால் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கடவுளை வழிபடக் கோவிலுக்குள் பிரவேசிக்கலாம் என்பது புலனாகின் றது. கட பேர்பெற்ற தென்னிந்திய ஆகமப் பண்டிதரொருவர் அடியில் வருமாறு குறை கூறுகின்றார்:-" இந்தியாவில் பிரிட் டிஷ் ஆட்சி ஏற்பட்ட பிறகு, இக்காலத்தில், ஆலயக்கமிட்டிக ளும், தர்ம கர்த்தாக்களும் ஆகமக் கோட்பாடுகளுக்கு நேர் விரோதமான காரியங்களைச் செய்யும்படியாகப் பார்ப்பனர் களும், அவர்களுடைய ஆதிக்கத்திற்குட்பட்ட பார்ப்பனரல்லா தாரும் பல சந்தர்ப்பங்களில் தூண்டியிருக்கின்றார்கள்." ஆனால், ஆதிகாலந் தொட்டே, உயர்ந்த சாதியாராகிவிடவும், ஆரிய வகுப்பிற் சேரவும், ஆரியரது வுள்களை வணங்கவும், இந்தியா விலுள்ள அனாரியர்களனைவரும் வருந்தத் தக்கவாறு போராடி யிருக்கின்றார்கள்....... கிட்டத்தட்ட வைகியருக்குச் சமமான பதவி அனேக சூத்திரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிரிட்டிஷார் வருமட்டும் சகல சூத்திரர்களும் தாழ்த் தப்பட்ட வகுப்பார்களும் அவரவர் தாழ்வான நிலைமையில் திருப்தியுடனிருந்து வந்ததோடு, பிராமணர்கள் உதவியில்லா மலே தங்கள் மதச்சடங்குகளை நடத்தியும் வந்தார்கள். ஏனெ னில் பிராமணர்கள் இருபிறப்பாளர்களல்லாத மற்ற சாதியாரின் மத சம்பந்தமான சடங்குகளை நடத்திவைக்கக் கூடாதென மனு விதித்திருக்கிறார்" என்று வட இந்தியாவைச்சேர்ந்த இந்து வழக் கறிஞரொருவர் வருத்தப்படுகிறார்.