பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74 ஆலயப் பிரவேச உரிமை போது பிராமணப் புரோகிதர்களுக்குத் தொழிவில்லாமற் போய்விடவே, தேசத்தில் அப்பொழுது நடைமுறையிலிருந்து வந்த அக்னி சம்பந்தமற்ற கிரியைகள் மீது அவர்கள் கவனஞ் செலுத் தியிருக்கவேண்டும்." "மெதுவாக, மிக மெதுவாக வேதாந்தமும், ஆகமமும் ஒன்றாகக் கலக்க ஆரம்பித்தன. புராணங்களிற்கூட அவை இரண்டும் வெவ்வேறாக யிருக்கின்றனவேயன்றி ஒன்றாகக் கலக்கவில்லை. சங்கராச்சாரியார் காலத்திலும் (கி. பி. 81-வது நூற்றாண்டு) அவை ஒன்றாகச் சேரவில்லை” யென்று திரு. P. T. சீனிவாசய்யங்கார் அவர்கள் கூறுகின்றார். ஆகவே, அறுபத்துமூன்று நாயன்மார்களும் ஆலயங்களில் இடம் பெற்று, அவர்களுக்குப் பூஜை நடத்தப்பட்டு வருவதி னின்றும் உயர்ந்த சா தியையோ, தாழ்ந்த சாதியையோ, தீண்டத்தகாதவரையோ சேர்ந்த எவரையும் ஆலயப்பிரவேசத் தினின்றும் தடுக்க சட்டமோ, மதமோ இடங்கொடுக்கவில்லை யென்பது நன்கு புலனாகிறது. (2) " கடவுளுக்கு அர்ப்பணஞ் செய்யப்பட்ட உணவை, அந்தக் கடவுள் சந்நிதானத்திலேயே எல்லா வகுப்பார்க்கும் ஒரே மாதிரிப் பிரசாதமாக வழங்குவதிலிருந்து இந்தக் கோவில் களின் சர்வ சமய சாதி சமரஸத்தன்மை வெளியாகின்றது. ஒரே மதத்தாலிணைக்கப்பட்ட சகல சாதி, வகுப்பு மக்களும் சமபந்தியில் உணவு உட்கொள்ளவேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையான தத்துவம் மேற்குறித்த வழக்கத்தி லடங்கி யிருக்கிறது. பிராமணரல்லாதார் புகமுடியாத யாகசாலையைப் போன்று இந்தக்கோவில், ஸ்மிருதிகளிற் கண்ட ஸ்தாபனமாக இருந்திருக்குமென்றால், அங்குள்ள அனைவர்க்கும் பிரசாதம் வழங்கப்பட்டிராது" என்று ஒரு பெரிய இந்திய சட்ட நிபுணர் கூறுகின்றார். ஆகையால், தென்னிந்தியாவில் ஆரியரல்லாதாரால் நிறு வப்பட்ட கோவில்கள் வழிபாட்டில் ஆகம முறையை யன்றி ஸ்மிருதி முறையைத் தழுவவில்லை யென்றும், பேதமில்லா த