பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள். பொருள், புயல் என்னும் வளம் குன்றி(ய)க்கால் - ' புயல் என்னும் வருவாய் வளம் குறைந்தக்கால், உழவர் ஏரின் உழார் - உழவு தொழிலைச் செய்வோர் ஏரால் உழமாட்டார். அகலம். அவர் உழாதபடியால் உணவுப் பொருள்கள் உள வாகா என்ற வாறு, குன்றியக்கால் என்பது செய்யுள் விகாரத்தால் யகரம் கெட்டு நின்றது .* அகர அளபெடை இசை நிறைக்க வந்தது. மணக்குடவர், தாமத்தர் பாடம் 'குன்றுக்கால்', . கருத்து. மழை இல்லையேல், மாந்தர் உழவு தொழியைச் செய்யார். ௫. கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே யெடுப்பதூஉ, மெல்லா மழை. பொருள், கெடுப்பதும் (பெய்ய வேண்டிய காலத்துப் பெய் யாதும், பெய்ய வேண்டாத காலத்துப் பெய்தும் மாந்தரைக்) கெடுப் பதும், கெட்டார்க்கு சார்வாய் எடுப்பதும் கெட்டவருக்குத் துணை யாகி ( பெய்யவேண்டிய காலத்துப் பெய்தும், பெய்ய வேண்டாத காலத்துப் பெய்யா தும் அவரை) ஆக்குவதும், எல்லாம் மழை (u:) -(இவை) எல்லாம் செய்ய வல்லது) மழையே, அகலம். பிரிநிலை ஏகாரம் செய்யுள் விகாரத்தால் கெட்டது. மற்று, ஆங்கு, எ, என்பன அசைகள், மணக்குடவர் பாடம் 'கெடுப் பதும்', 'எடுப்பதும்', தாமத்தர் பாடம் - வல்ல மழை', மற்றை மூவர் பாடம் + எல்லா மழை'. கருத்து. ஒருவனைக் கெடுப்பதும் எடுப்பதும் மழை. 15. ௬. விசும்பிற் துளிவீழி னல்லான்மற் றாங்கே' ' பசும்புற் றலைகாண் பரிது.

108

108