பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

லின்றி வழிநனி பயக்குமென், றோம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால் அறிக. எதிர்கால விளை வுணர்ச்சி பயத்தல் சொல்லிய படி, (௩௰௫)

கவிசாகரப் பெருந்தேவனார்.

பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனத
மாவிற் கருமுனியா யானைக் கமரரும்பற்
றேவிற் றிருமா லெனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா.

இ=ள். பூவிற்குத் தாமரை - மலர்களுக்குள்ளே தாமரை மலரும், பொன்னுக்குச் சாம்புனதம் - பொன்களுக்குள்ளே சாம்புனதப் பொன்னும், ஆவிற்கு அருமுனி ஆ - பசுக்களுக்குள்ளே காமதேனுவும், யானைக்கு அமரர் உம்பல் - யானைகளுக்குள்ளே ஐராவதமும், தேவில் திருமால் என - தேவர்களுக்குள்ளே திருமாலும் போல் , பாவிற்கு வள்ளுவர் வெண்பாச் சிறந்த தென்ப -நூல்களுக்குள்ளே திருவள்ளுவரது குறள் வெண்பாச் சிறந்ததென்று அறிவுடையோர் சொல்லுவர்.

'ஏ' அசை, 'பா' ஆகுபெயர். பொன் ஆடகம், கிளிச் சிறை , சாதரூபம், சாம்புனதம் என நால் வகைப்படும். காமதேனு வசிட்ட முனியிடத் துள்ள தாகலின், அரு முனி யா வென்றார். உவமான முகத்தால் இஃது பல நூல்களினும் சிறந்து நிற்கின்ற மாட்சிமை சொல்லிய படி. (௩௰௬)

மதுரைப் பெருமருதனார்.

அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தாற் றளிய- முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனா
ரோதவழுக் கற்ற துலகு.

40