பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

'ஆல்' அசை. வடமொழியும் தென்மொழியும் பிறமொழிகள் போலாது பாணினியாரும் அகத்தியனாரு முதலாகிய முனிவர்களாலே செய்யப்பட்ட இலக்கண நூல்களாலே சீர் திருந்தி நிற்றன் முதலிய குணங்க ளுடைமையாலும், அது பிராகிருத முதலியவற்றுக்குப் போல் இது ஆந்திரம் முதலியவற்றுக்கு முதலாய் நிற்றலாலும் ஒன்றற் கொன்று குறைபா டுடைத் தன்றேனும், வேதமுடைமை பற்றி வடமொழிக்குச் சொல்லப்பட்ட உயர்வு தென்மொழிக்கண்ணே திருக்குறள் உண்டாதலின் இனி இல்லை யென்றற்கு, இதனினிது சீரிய தென் றொன்றைச் செப்பரி தென்றார். இத் திருக்குறளாலே வடமொழியோடு தென் மொழிக்கு ஒப்புமை நிறைவு சொல்லிய படி. (௪௰௩)

களத்தூர்க் கிழார்.

ஒருவ ரிருகுறளே முப்பாலி னோதுந்
தரும முதனான்குஞ் சாலு--மருமறைக
ளைந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்.

இ-ள். அரு மறைகள் ஐந்தும் சமய நூல் ஆறும் நம் வள்ளுவனார் புந்தி மொழிந்த பொருள் - இருக்கு முதற் பாரத மீறாகிய அரிய வேதங்களைந்தும் அவ் வேதத்தின் வழிப்பட்ட சமய நூல்க ளாறும் நம்முடைய திருவள்ளுவரால் உலகத்தார்க்குப் புத்தியாகச் சொல்லப்பட்ட நூலி லடங்கும்; ஒருவர் இரு குறளே முப்பாலின் ஓதும் தருமம் முதல் நான்கும் சாலும் - ஆதலால், ஒருவர் ஒரு விகற்பமும் இரு விகற்பமு மாகிய இருவகைக் குறள்களையுமே முப்பால்களில் அத்தியயனஞ் செய்து அறியப்படுகின்ற அறம் முதலிய நாற் பொருள்களும் அவருக்குப் போதும்,

ஒருவனுக்கே ஐந்தும் ஓதி யுணர முடிவு போகாது. வேறு

46