பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒன்பதாவது.குற்றியலுகரப் புணரியல். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், குற்றியலுகர ஈறு வருமொழியோடு புணரும் இயல்பு உணத்தினமையின் குற்றியலுகரப் புணரியல் எனப்பட்டது. சாஎ. ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி வன்ருெடர் மென்ருடர் அயிரு முன்தே யுகரக் குறுகிடன். இத்தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின், இக்குற்றியலுகரம் வரும் இட திற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் - ஈர் எழுத்து ஒருமொழி -இரண்டு எழுத்தாதாகிய ஒரு மொழியும், மயிர்த்தொடர் - உயிர்த்தொடர்மொழியும், இடைத்தொடர் இடைத்தொடர் மொழியும், ஆய்தத்தொடர் - ஆய்தத்தொடர்மொழியும், வன்தொடர் - வன்தொடர் மொழியும், மென்தொடர்- மென்தொடர்மொழியும், அ இரு மூன்று (ஆகிய) அவ் ஆறு (என்று சொல்லப்படும்), உகரம் குறுகு இடன் உகரம் குறுகி வரும் இடன். உ-ம் :- நாகு, வரகு, தெள்கு, எஃகு, சொக்கு, குரங்கு என வரும். [நாகு - இளமரம். தெள்கு -ஒரு பூச்சி எஃகு - வேல். 'தொடர் நான்கும் ஆகு பெயர். சுட்டின் நீட்டமும் வகர உடம்படுமெய் யகர உடம்படுமெய்யானம் செய்யுள் விகாரம். 'ஏகாரம்' தேற்றேகாரம். நன்னூலார் போல இந்நூலார் வல்லொற்றின் மீது ஏறிய உகரமே குறுகும் என்று கூறாமை காண்க.) உ சறஅ. அவற்றுள், ஈரொற்றுத் தொடர்மொழி இடைத்தொட ராகா. (க) இஃது, அவ் ஆறனுள் ஒர் ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்: அவற்றுள் ஈர் ஒற்று தொடர்மொழி - அவற்றுள் ஈர் ஒற்றுத்தொடர் மொழி[களில்],இடைத்தொடர் ஆகா -இடைத்தொடர் ஆகா, (வன்றொடர் மொழி யும் மென்றொடர் மொழியும் ஆம்.) உ-ம். ஈர்க்கு; மொய்ம்பு எனவரும். [(இடையில்) இரண்டு ஒற்றெழுத்துக்கள் தொடர்ந்து வரும் (மூவகை ) மொழி களில் இடைத்தொடர் மொழிகள் உகரம் குறுகும் இடன் ஆகா என்பதே நேர் உரை. உ-ம்: வெய்ய்து எனவரும். இவ்விடைத்தொடர்மொழிகள் "அலர்பெய்ய்து ஆராரழிப்பினு மென்னொடு, மலர்கொய்ய்து வூடு மகிழ்ந்து" என்றது போன்ற செய்யு ளின் கண்ணே நிகழும். இரண்டொற்று இடைவிடாமையைக் குறித்து நின்றது.)