பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கச தொல்காப்பியம் - இளம்பூரணம். உ-ம். வெண்கலம், புன்கண், வெண்சாந்து, புன்செய், வெண்ஞாண், பொன் ஞாண், வெண்பலி, பொன்பெரிது, வெண்மாலை, பொன்மாலை, மண்யாது, பொன் யாது, மண்வலிது, பொன்வலிது எனவரும். உஎ ஞநமவ வென்னும் புள்ளி முன்னர் பக்கா னிற்றன் மெய்பெற் றன்றே. இதுவும் அது. (2) இ-ள் :- ஞநம வ என்னும் புள்ளி முன்னர்-ஞ ந ம வ என்று சொல்லப்படு கின்ற புள்ளிகளின் முன்னர், யஃகான் நிற்றல் மெய்பெற்றன்று-யகரம் மயங்கி நிற்றல் பொருண்மைபெற்றது. (எசாரம் சத்றசை.) உ-ம். உரிஞ்யாது, பொருந்யாது, திரும்பாது, தெவ்யாது, எனவரும். (உஎ) உஅ. மஃகான் புள்ளிமுன் வவ்வுக் தோன்றும். இதுவும் அது. இ-ள் :- மஃகான் புள்ளிமுன்-மகரமாகிய புள்ளி முன்னர், வ உம் தோன் றும் - (பகர யகரங்களேயன்றி) வகரமும் தோன்றிமயங்கும். உ-ம். நிலம் வலிது எனவரும். உச. யரழ வென்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும். இதுவும் அது. (உஅ) இ-ள்:-யரழ என்னும் புள்ளி முன்னர்-யாழ என்று சொல்லப்படுகின்ற புள்ளிகளின் முன்னர், முதல் ஆகு எழுத்து நுகர மொடு தோன்றும் - மொழிக்கு முதல் ஆம் என்னப்பட்ட ஒன்பதுமெய்யும் (முதலாகா) ஙகரத்தோடு தோன்றி மயங்கும். உ-ம். வேய் கடிது, வேர் கடிது, வீழ் கடிது, சிறிது, தீது, பெரிது; ஞான் றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது எனவரும். வேய்ஙனம், வேர்ஙனம், வீழ்ஙனம் எனவும் ஒட்டுக. வேய் யாது என்புழி, உடனிலையாதலான் யகரம் ஒழித்து ஒட்டுக. (உக) [மொழிக்கு முதல் ஆம் என்னப்பட்ட ஒன்பது மெய்' என்பது மொழிக்கு முதலாய் வரும் ஒன்பது உயிர்மெய்யெழுத்துக்களில் உயிரொழிந்த மெய்களைக் குறித்துரின்தது) கூடு. மெய்ந்நிலைச் சுட்டி னெல்லா வெழுத்துந் தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே இது, நிறுத்த முறையானே உடனிநிலைமயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- மெய்நிலை சுட்டின்-பொருள்நிலைமைக் கருத்தின்கண், எல்லா எழுத் தும், தம்முன் தாம் வரும்-எல்லா மெய்யெழுத்தும் தம்முன்னே தாம் வந்துமயங்கும், ர ழ அலங்கடை-ரகார முகாரங்கள் அல்லாத இடத்து. [ஏகாரம் ஏற்றசை.] உ-ம். காக்கை, எங்ஙனம், பச்சை, மஞ்ஞை, பட்டை, மண்ணை, தத்தை, வெந்நோய், அப்பை, அம்மி, வெய்யர், எல்லி, எவ்வீ, கொள்ளி, கொற்றி, கன்னி