பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உச தொல்காப்பியம் இளம்பூரணம் - ருக. பன்னீ ருயிரு மொழிமுத லாகும். இஃது, உயிரெழுத்து மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:-பன்னீர் உயிரும் மொழிமுதல் ஆகும்-பன்னிரண்டு உயிரெழுத்தும் மொழிக்கு முதலாம். உ-ம். அடை, ஆடை, இடை, ஈயம், உால், ஊர்தி, எழு, ஏணி, ஐவனம், ஒளி, ஒளி,ஒளவியம் எனவரும். லிற்று. சுய. உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா. இஃது,(உயிர்) மெய்யெழுத்து மொழிக்கு முதலாம் ஆறு உணர்த்துதல் நுத இ-ள்:உயிர்மெய் அல்லன மொழி முதல் ஆகா-உயிரோடுகூடிய மெய்யல் லாதனவாகிய தனிமெய்கள் மொழிக்கு முதலாகா. உயிரோடுகூடிய மெய்கள் மொழிக்கு முதலாம். ஈண்டு உயிர்மெய் யென்பது வேற்றுமைநயம் கருதி யெனவுணர்க். ஈண்டு 'ஒற்றுமை கருதில், "கதநப மவெனு மாவைந் தெழுத்தும், எல்லா வுயிரோடுஞ் செல்லுமார் முதலே" [மொழிமரபு - உஅ ] எனச் சூத்திரம் சுருங்க வருவதன்றி, இதனாற் சொல்லப்பட்ட அறுபது உயிர்மெய்யினை எடுத்தோத வேண்டிச் சூத் திரம் பாக்கவரு மென்பது. (சுருங்க ஒதுமன்றி' எனவும், 'ஒதவேண்டில்' எனவும் முந்திய அச்சுப் பிரதியிலும் ஏட்டுப் பிரதிகளிலும் காணப்படும் (உரைப்) பாடம் எடுபெயர்த் தெழுதினோரால் நேர்ந்த பிழை போலும்.] கூக. கதந பமவெனு மாவைந் தெழுந்தும் z எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே. இது, மேல் முதலாம் என்னப்பட்ட உயிர்மெய்கட்கு வரையறை கூறுதல் நுதலிற்று. இ-ள் :- கதநபம் எனும் அ ஐந்து எழுத்தும் - கதநபம என்று சொல்லப்பட்ட ஐந்து தனிமெய்யெழுத்தும், எல்லா உயிரோடும் முதல் செல்லும்-பன்னிரண்டு உயிரோடும் மொழிக்கு முதலாதற்குச் செல்லும். உ-ம். கலை, காளி, கிளி, கீரி, குடி,கூடு,கெண்டை, கேழல்,கைதல்,கொண்டல், கோடை, கௌவை எனவும், தந்தை, தாடி, திற்றி,தீமை,துணி, தூணி, தெற்றி, தேவர், தையல்,தொண்டை, தோடு,தௌவை எனவும், நடம்,நாரை,நிலம்,நீர் நுழை, நூல், நெய்தல்,நேயம், நைகை, நொய்யன, நோக்கம், நௌவி எனவும், படை பாடி, பிடி, பீடம், புகழ், பூமி, பெடை, பேடி, பைதல், பொன், போதகம், பெளவம் எனவும், மடம்,மாலை, மிடறு,மீனம்,முகம்,மூதூர், மெலிந்தது, மேனி, மையல், மொழி, மோத கம்,மௌவல் எனவும் வரும். 'முதற்கு' என்பதன் நான்காம் உருபு விகாரத்தாற் றொக்கது. (ஆர் என் பது அசை. ஏகாரம் ஈற்றசை.) கூஉ. சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அ ஐ ஒளவெனு மூன்றலங் கடை இதுவும் அது. டயே. (உஅ )