பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் தோகைமரபு ஈண்டு உளபடவென்பது ஆகவென்னும் பொருண்மைத்து. ருக உ-ம். விள, தாழ் என நிறுத்து, ஞான்றது,நீண்டது,மாண்டது,யாது, வலிது, அடைந்தது, ஆடிற்று, இடிந்தது,ஈரிற்று, உடைந்தது, ஊறிற்று, எழுந்தது, ஏறிற்று, ஐது, ஒடிந்தது. ஓடிற்று, ஒளவியத்தது, நுந்தையது எனவும்; ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வலுமை, அடைவு, ஆட்டம், இடிபு, ஈட்டம், உடைபு, ஊற்றம், எழு, ஏணி, ஐயம், ஒடுக்கம், ஒக்கம், ஔவியம், நுந்தை எனவும் ஒட்டிக்கொள்க. 'எல்லாம்' என்றதனான், ஒற்றிரட்டலும், உடம்படு மெய்கோடலும், உயிரேறி முடிதலும் எனவரும் இக்கருவித்திரிபு மூன்றுதிரியும் அன்மையின் திரிபெனப் படா வென்பது கொள்க. இஃது இருபத்துநான்கு ஈற்றிற்கும், அல்வழியினும், வேற்றுமையினும், அகத்தோத்தினுள் நாற்பத்தெட்டுச் சூத்திரத்தான் முடிவதனை, ஈண்டு ஒரு சூத்திரத்தான் தொகுத்து முடித்ததாயிற்று. மேலும் இவ்வாறே தொகுத்து முடிக்கின்றவாறு அறிக. ளசசு.அவற்றுள் மெல்லெழுத் தியற்கை யுறழினும் வரையார் சொல்லிய தொடர்மொழி யிறுதி யான. (2) இது, மேற்கூறிய முடிப்பிற் சிலவற்றிற்கு, அம்முடிபு விலக்கிப் பிறிது விதி எய்து வித்தல் நுதலிற்று. இ-ள் :- அவற்றுள்- மேற்சொல்லப்பட்ட மூன்றுகணத்தினும், மெல்லெழுத்து இயற்கை உறழினும் வரையார்-மெல்லெழுத்தினது இயல்பு இயல்பாதலேயன்றி உறழ்ந்துமுடியினும் நீக்கார், சொல்லிய தொடர்மொழி இறுதியான் - சொல்லப்பட்ட தொடர்மொழி ஈற்றுக்கண். உ-ம். கதிர்ஞெரி, கதிர்ஞ்ஞெரி, நுனி, முரி எனவரும். வருமொழி முற்கூறியவரளுர், ஓரெழுத்தொருமொழியுள்ளும், ஈரெழுத் தொருமொழியுள்ளும் சிலவற்றிற்கு உறழ்ச்சிமுடிபு கொள்க. உ-ம். பூஞெரி, பூஞ்ஞெரி, நுனி, முரி எனவும், காய்ஞெரி, காய்ஞ்ஞெரி, நுனி, முரி எனவும் வரும். ஈரெழுத்தொரு 'சொல்லிய' என்றதனான், ஒரெழுத்தொருமொழியுள்ளும் மொழியுள்ளும் சிலவற்றிற்கு மிக்கு முடிதல் கொள்க. கைஞ்ஞெரித்தார், நீட்டினார், மடித்தார் எனவும், மெய்ஞ்ஞானம், மெய்ந்நூல், மெய்ம்மறந்தார் எனவும் வரும்.(ங) ளச எணனவென் புள்ளி முன் யாவு ஞாவும் வினையோ ரனைய வென்மனார் புலவர். விற்று. இது, யகார ஞகரங்கள் முதலாம்வழி நிகழ்வதோர் கருவி கூறுதல் நுத இ-ள்:- ண ன என் புள்ளிமுன்-ணன என்று சொல்லப்படும் புள்ளிகளின் முன், யாவும் ஞாவும் வினை ஓர் அனைய என்மனார் புலவர்-யாவும் ஞாவும் வினைச் சொற்கண் முதலாதற்கு ஒருதன்மைய வென்றுசொல்லுவர் புலவர். உ-ம். மண்யாத்த எனவும், பொன்யாத்த எனவும், மண்ஞாத்த எனவும், பொன் ஞாத்த எனவும் வரும்.