பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - தொகைமரபு ருஎ 'மெய்பெற' என்றதனான், உறழ்ச்சியாய் முடிவனவும் கொள்க. மைகொணர்ந் தான், மைக்கொணர்ந்தான் எனவும்; வில்கோள், விற்கோள் எனவும் வரும். இவ் வாறு திரிந்துமுடியாது, அகத்தோத்தில் பொதுமுடியே முடிபாய்க் கடுக்குறைத் தான், செப்புக்கொணர்ந்தான் என்றாற்போல முடிவன அறிந்து கொள்க. இவ் வாறு வேறுபடமுடிவது பெரும்பான்மையும் இரண்டாவது வினையோடு முடியும் வழிப்போலும். அது " தம்மி னாகிய தொழிற்சொன் முன்வரின்" [தொகைமரபு- கச] என நின்ற அதிகாரத்தாற் கொள்ளவைத்தார் போலும். "தன்னின முடித் தல்" என்பதனான், ஏழாம்வேற்றுமை வினையொடு முடியும்வழித்திரிபும்கொள்க. வரைபாய்வருடை, புலம்புக்கன்னே புல்லணற்காளை எனவரும். ளருஅ. வேற்றுமை யல்வழி இ ஐ யென்னும் ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைஇய அவைதாம் இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும் உறழா குருவு மென்மனார் புலவர். (கரு) இஃது, இகரவீற்றுப் பெயர்க்கும் ஐகாரவீற்றுப் பெயர்க்கும் அவ்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள் :- வேற்றுமை அவ்வழி இ ஐ என்னும் ஈற்றுப்பெயர்க்கிளவி மூவகை நிலைய - வேற்றுமையல்லாத அல்வழியிடத்தும் இ ஐ என்னும் ஈற்றையுடைய பெய ர்ச்சொற்கள் மூவகைமுடிபு நிலைமையுடைய. அவைதாம் இயல்பாகுனவும் வல்லெ ழுத்து மிகுநவும் உறழாகுநவும் என்மனார் புவவர்-அவைதாம் இயல்பாய் முடிவ னவும் வல்லெழுத்துமிகுவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் இவையென்று சொல் லுவர் புலவர். உ-ம். பருத்தி குறிது, கரை குறிது; சிறிது, தீது, பெரிது என இவை இயல்பு அலிக்கொற்றன், புலிக்கொற்றன் என இவை மிகுதி. கிளி குறிது, கிளிக் குறிது, தினை குறிது, தினைக் குறிது என இவை உறழ்ச்சி. 'பெயர்க்கிளவி'மூவகை நிலைய எனவே, பெயர்க்கிளவியல்லாத கிளவி மிகுதி யும் இயல்பும் என இருவகைய எனக்கொள்க. ஒல்லைக்கொண்டான் என்பது ஐகா வீற்று வினைச்சொல்மிகுதி. இகாவீற்றுமிகுதி வந்தவழிக் கண்டுகொள்க. தில்லைச்சொல்லே, மன்னைச்சொல்லே என்றது ஐகார வீற்றிடைச்சொல் மிகுதி. இவற்றியல்பு வந்தவழிக் கண்டுகொள்க. கடிகா என்பது இகரவீற்று உரிச்சொல்லியல்பு. இவ்வீற்றுமிகுதி வந்தவழிக் கண்டுகொள்க. பணைத்தோள் என்பது ஐகாரவீற்று உரிச்சொல்மிகுதி. இவற்றியல்பு வந்தவழிக் கண்டுகொள்க. ளருக. சுட்டு முதலாகிய விகர விறுதியும் எகரமுதல் வினாவி னிகர விறுதியுஞ் சுட்டுச்சினை நீடிய வையெ னிறுதியும் யாவென் வினாவி னையெ னிறுதியும் வல்லெழுத்து மிகுநவு முறழா குநவுஞ் சொல்லிய மருங்கி னுளவென மொழிப. 8 (கச)