பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கொண்டிருந்தது. 44 கண்ணனூர்ச் சிறை யினின்றும் எனது தண்டனைக் காலம் கழிந்து விடுதலையடைந்த நான் என் குடும்பத்தோடு சென்னை வந்து தங்கியிருந்தேன். பாரதியார், ஸ்ரீநிவாஸாச்சாரி முதலிய சென்னைத் தேச பக்தர்களைக் காணவேண்டும் என்ற அவா எனக்கு மேலிட்டது. புதுவையில் பாரதி தரிசனம் மாமா நான் புதுச்சேரிக்குச் சென்றேன். வீட்டை விசாரித்துக் கண்டு பிடித்து அங்கு போய்ச் சேர்ந்தேன். மாமாவின் மனைவி மக்க ளையும் கண்டு களித்தேன். அவருடன் தங்கி அடிசில் உண்டும், ஆவிநீர் குடித்தும், அவரது ஆடல் பாடல்களைக் கண்டும் கேட்டும், அக மகிழ்ந்து சின்னாள் கழித்தேன். மாமாவும் நானும் எங்கள் நண்பர் அரவிந்தர் மாளிகைக்குச் சென்றோம். பலர் என்னிடம் சொல்லியது போல அரவிந்தர் ஓர் ரிஷியாயிருக்க வில்லை, தேசபக்தராவும் தேசத்தலைவராகவுமே விளங் கினார்.