பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அம லா தி க்ய ன் (அங்கம்-1. ു. கோபத்திலும் துக்கமே அதிகமாய் விளங்கியதுமுகத்தினில். அம. முகம் வெளுத் திருந்ததோ அல்லது சிவக் திருந்தகோ ? ஹ. இல்லை, மிகவும் வெளுத் திருந்தது. அம. உங்களை உற்றுப் பார்த்தனரா? ஹ. ஆம், சற்றும் மாருமல். அம, ஐயோ! அங்கு நா னிருந்திருக்க லாகாதா ! ஹ. ఒతలె மிகவும் ஆச்சரியத்தை விளைத்திருக்கும். அம. இருக்கும் இருக்கும்; அதிக நாழிகை தங்கியதோ: ஹ. ஒருவன் சாதாரணமாக நூறு எண்னும் பரியத்தம், மா.பா. இல்லை இல்லை. இன்னும் அதிக கோம். ஒற். நான் பார்த்த பொழுதல்வ. அம. கேசம் கரைத் திருந்ததா?-இல்லை ? இற். உயிருட னிருக்கும்பொழுது நான் பார்த்த வண்ண்ம் இருந்தது, கறுப்பும் வெண்மையும் கல்ந்ததாய். அம. நா னின்றிரவு காவலிருக்கிறேன், ஒருவேளை இன்றிரவும் உலாவலாம் அது மறுபடியும். ஹ. அங்கனமே செய்யும், நான் உத்தரவாதம். அம. என் தந்தை புருவைக்கொண்டு அது தோற்றுமாயின், மெளனமாயிராவிடின் நரகத்தில் விழ்த்துவேனென நமனே எதிர்த்துக் கூறினும், நான் அதனுடன் பேசுவேன். இது డJ 65), இரகசியமாய்க் காப்பாற்றிய துண்மையாயின், இன்னு மப்படியே மெளனம் பாராட்டக் கேட்டுக்கொள்ளுகிறேன் உங்களெல்லோரையும். எது நடந்தாலுமின்றிரவு, மனத்தா அறிவதன்றி வாய்கிறந்து கூருர்ே. நீங்கள் செய்யும் நல்லுத வியை நான் மறவேன் என்றும் ; ஆகவே விடைபெற்றுக் கொள்ளுங்கள், பதினேந்து நாழிகைக்கெல்லாம் கொத்தளக் தில் வந்து காண்கின்றேனும்மை. எல்லோரும் தங்கள் கட்டளை எங்கள் கடமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/24&oldid=725190" இலிருந்து மீள்விக்கப்பட்டது