பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


வரம்புரையாக:

(அ)நீதிபதி ஒருவர், குடியரசுத்தலைவருக்குத் தம் கையொப்பமிட்டு எழுத்துவழித் தெரிவித்துத் தம் பதவியை விட்டு விலகிக் கொள்ளலாம்;
(ஆ) நீதிபதி ஒருவர், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு 124 ஆம் உறுப்பின் (4) ஆம் கூறில் வகைசெய்யப்பட்டுள்ள வழிமுறையின்படி, பதவியிலிருந்து குடியரசுத்தலைவரால் அகற்றப்படலாம்; நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியாகக் குடியரசுத்தலைவரால் அமர்த்தப்பெறுவதன் மேல் அல்லது இந்திய ஆட்சிநிலவரைக்குள் உள்ள வேறு உயர் நீதிமன்றம் எதற்கும் குடியரசுத்தலைவரால் அவர் மாற்றல் செய்யப்பெறுவதன் மேல், அவருடைய பதவி காலியாகிவிடும்.

(2) ஒருவர், இந்தியாவின் குடிமகனாக இருப்பதுடன்-

(அ)இந்திய ஆட்சிநிலவரையில் குறைந்தது பத்தாண்டுகள் நீதித்துறைப் பதவியை வகித்துள்ளவராக, அல்லது
(ஆ) ஓர் உயர் நீதிமன்றத்திலோ, தொடர்ந்து இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட அத்தகைய நீதிமன்றங்களிலோ குறைந்தது பத்தாண்டுகள் வழக்குரைஞராக இருந்துள்ளவராக

இருந்தாலன்றி, உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியாக அமர்த்தப்பெறுவதற்குத் தகுதிப்பாடு உடையவர் ஆகார்.

விளக்கம்- இந்தக் கூறினைப் பொறுத்தவரை—

(அ) ஒருவர் இந்திய ஆட்சிநிலவரையில் நீதித்துறைப் பதவியை வகித்துள்ள காலஅளவைக் கணக்கிடுகையில், அவர் நீதித்துறைப் பதவி எதனையும் வகித்திருந்த பின்பு, உயர் நீதிமன்ற வழக்குரைஞராக அவர் இருந்துவந்துள்ள அல்லது ஒரு தீர்ப்பாயத்தின் உறுப்பினர் பதவியை அல்லது ஒன்றியத்தின்கீழ் அல்லது ஒரு மாநிலத்தின்கீழ் சட்டத்தில் சிறப்பறிவு தேவைப்படுகிற பதவியிடம் ஒன்றை வகித்து வந்திருக்கிற காலஅளவையும் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும்:
(அஅ) ஒருவர், உயர் நீதிமன்ற வழக்குரைஞராக இருந்துள்ள காலஅளவைக் கணக்கிடுகையில், அவர் வழக்குரைஞரான பின்பு, ஒரு நீதித்துறைப் பதவியை அல்லது ஒரு தீர்ப்பாயத்தின் உறுப்பினர் பதவியை அல்லது ஒன்றியத்தின்கீழ் அல்லது ஒரு மாநிலத்தின்கீழ் சட்டத்தில் சிறப்பறிவு தேவைப்படுகிற பதவியிடம் ஒன்றை வகித்து வந்திருக்கிற காலஅளவையும் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும்; (ஆ) ஒருவர், இந்திய ஆட்சிநிலவரையில் நீதித்துறைப் பதவியை வகித்துள்ள அல்லது உயர் நீதிமன்ற வழக்குரைஞராக இருந்துள்ள காலஅளவைக் கணக்கிடுகையில், இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு 1936 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தினால் வரையறை செய்யப்பட்டிருந்த இந்தியாவிற்குள் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் நாளுக்கு முன்பு அடங்கியிருந்த பரப்பிடம் எதிலும் அவர் நீதித்துறைப் பதவி வகித்துள்ள அல்லது, நேர்வுக்கேற்ப, அத்தகைய பரப்பிடம் எதிலும் உள்ள உயர் நீதிமன்றம் எதிலும் ஒரு வழக்குரைஞராக இருந்துள்ள காலஅளவையும் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

(3) உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வயது என்ன என்பது குறித்துப் பிரச்சினை எதுவும் எழுமாயின், அந்தப் பிரச்சினை இந்தியத் தலைமை நீதிபதியைக் கலந்தாய்வு செய்தபின்பு, குடியரசுத்தலைவரால் முடிபு செய்யப்படுதல் வேண்டும்; மேலும், குடியரசுத்தலைவரின் முடிபே அறுதியானது ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/108&oldid=1468734" இலிருந்து மீள்விக்கப்பட்டது