பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


(4) ஆளுநர், இந்த உறுப்பின்படி ஆணையத்தால் செய்யப்படும் ஒவ்வொரு பரிந்துரையும், அதன்மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விளக்க விவரக்குறிப்புடன் சேர்த்து மாநிலச் சட்டமன்றத்தின் முன் வைக்கப்படுமாறு செய்தல் வேண்டும்.

243ஒ . ஊராட்சிகளின் கணக்குகளைத் தணிக்கை செய்தல் :

மாநிலச் சட்டமன்றம், சட்டத்தின் வயிலாக, ஊராட்சிகளால் கணக்குகள் வைத்து வரப்படுவதையும், அந்தக் கணக்குகள் தணிக்கை செய்யப்படுவதையும் பொறுத்த வகையங்களைச் செய்யலாம்.

243ஓ. ஊராட்சிகளுக்குத் தேர்தல்கள்:

(1) ஊராட்சிகளுக்கான தேர்தல்கள் அனைத்திற்காகவும் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கான மற்றும் அத்தேர்தல்களை நடத்துவதற்கான கண்காணிப்பு, நெறிப்படுத்துகை, கட்டாள்கை ஆகியவை, ஆளுநரால் அமர்த்தப்பெறும் மாநிலத் தேர்தல் ஆணையரைக் கொண்டிருக்கிற மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் உற்றமைந்திருக்கும்.

(2) மாநிலச் சட்டமன்றத்தால் வகுக்கப்படும் சட்டம் எதனின் வகையங்களுக்கும் உட்பட்டு, மாநிலத் தேர்தல் ஆணையரின் பணிவரைக்கட்டுகளும் பதவியுரிமைக் காலமும், ஆளுநர் வகுக்கும் விதியின் வழித்தீர்மானிக்கிறவாறு இருக்கும்:

வரம்புரையாக: உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை அகற்றுவது போன்ற அதே முறையிலும் அதே காரணங்களின்பேரிலும் அன்றி, மாநிலத் தேர்தல் ஆணையரை அவருடைய பதவியிலிருந்து அகற்றுதல் ஆகாது; மேலும், மாநிலத் தேர்தல் ஆணையரின் பணிவரைக்கட்டுகள், அவர் அமர்த்தப் பெற்ற பின்பு அவருக்குப் பாதகமான வகையில் மாற்றப்படுதல் ஆகாது.

(3) (1) ஆம் கூறின்படி மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள செயற்பணிகளை ஆற்றுவதற்குத் தேவைப்படும் பணியாளர் தொகுதியை, மாநிலத் தேர்தல் ஆணையம் அவ்வாறு கோருகிற போது, மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு மாநில ஆளுநர் கிடைக்குமாறு செய்வார்.

(4) இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு மாநிலச் சட்ட மன்றம், சட்டத்தின் வயிலாக ஊராட்சிகளின் தேர்தல்கள் பொறுத்த, அல்லது அவை தொடர்பான, பொருட்பாடுகள் அனைத்தும் பொறுத்து வகை செய்யலாம்.

243ஔ. ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்குப் பொருந்துதல் :

இந்தப் பகுதியின் வகையங்கள், ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்குப் பொருந்தும் மற்றும் ஓர் ஒன்றியத்து ஆட்சிநிலவரைக்குப் பொருந்தச்செய்கையில் ஒரு மாநில ஆளுநர் குறித்த சுட்டுகைகள், 239ஆம் உறுப்பின்படி அமர்த்தப்பட்ட ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் ஆளுகையர் குறித்த சுட்டுகை போன்றும், ஒரு மாநிலச் சட்டமன்றம் அல்லது சட்டமன்றப் பேரவை குறித்த சுட்டுகைகள், சட்டமன்றப் பேரவையைக் கொண்டிருக்கிற ஒன்றியத்து ஆட்சிநிலவரையைப் பொறுத்தவரை, அந்தச் சட்டமன்றப் பேரவை குறித்த சுட்டுகை போன்றும் செல்திறம் உடையதாகும்;

வரம்புரையாக: குடியரசுத் தலைவர், பொது அறிவிக்கை வாயிலாக, அந்த அறிவிக்கையில் அவர் குறித்துரைக்கலாகும் விலக்குகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டு, ஒன்றியத்து ஆட்சிநிலவரை எதற்கும் அல்லது அதன் பகுதிக்கு இந்தப் பகுதியின் வகையங்கள் பொருந்துதல் வேண்டும் என்று பணிக்கலாம்.

243க. இந்தப் பகுதி குறித்தசில வரையிடங்களுக்குப் பொருந்துறாது.

(1) இந்தப் பகுதியிலுள்ள எதுவும், 244ஆம் உறுப்பின் (1)ஆம் கூறில் சுட்டப்பட்ட பட்டியல் வரையிடங்களுக்கும், (2) ஆம் கூறில் சுட்டப்பட்ட பழங்குடியினர் வரையிடங்களுக்கும் பொருந்துறாது.

(2) இந்தப் பிரிவிலுள்ள எதுவும்

(அ) நாகலாந்து, மேகாலயா, மிசோராம் ஆகிய மாநிலங்களுக்கு,

(ஆ) அப்போதைக்குச் செல்லாற்றலிலிருக்கிற சட்டம் எதன்படியும் மாவட்ட மன்றங்களைக் கொண்டிருக்கிற மணிப்பூர் மாநிலத்தில் உள்ள குன்றுப் பரப்பிடங்களுக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/128&oldid=1467269" இலிருந்து மீள்விக்கப்பட்டது