பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132


295. பிற நேர்வுகளில் சொத்து, சொத்திருப்புகள், உரிமைகள், பொறுப்படைவுகள், கடமைப்பாடுகள் ஆகியவற்றிற்கு வாரிசுரிமை :

(1) இந்திய அரசாங்கம், இந்தியக் குறுநிலம் ஒன்றன் அரசாங்கத்துடன் பின்வருவன குறித்துச் செய்துகொண்ட உடன்பாடு எதற்கும் உட்பட்டு, இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து—

(அ) அத்தகைய தொடக்கநிலையை ஒட்டிமுன்பு முதலாம் இணைப்புப்பட்டியலின் ஆ பகுதியில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒரு மாநிலத்திற்கு நேரிணையான இந்தியக் குறுநிலம் ஒன்றிடம் உற்றமைந்திருந்த சொத்து, சொத்திருப்புகள் ஆகிய அனைத்தும், அத்தகைய சொத்தும் சொத்திருப்புகளும், அத்தகைய தொடக்க நிலையை ஒட்டுமுன்பு எந்த நோக்கங்களுக்காக வைத்துவரப்பட்டனவோ அந்த நோக்கங்கள், அதன்பின்பு ஒன்றியத்துப் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எதனைப் பொறுத்தும் ஒன்றியத்து நோக்கங்களாக இருக்குமாயின், அவை ஒன்றியத்திடம் உற்றமையும்; மேலும்,
(ஆ) முதலாம் இணைப்புப்பட்டியலின் ஆ பகுதியில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒரு மாநிலத்திற்கு நேரிணையான இந்தியக் குறுநிலம் ஒன்றன் அரசாங்கத்தின் அனைத்து உரிமைகளும் பொறுப்படைவுகளும் கடமைப்பாடுகளும் அவை ஒப்பந்தம் ஒன்றிலிருந்து எழுவனவாயினும் பிறவாறாயினும், எந்த நோக்கங்களுக்காக அத்தகைய தொடக்கநிலைக்கு முன்பு அத்தகைய உரிமைகள் ஈட்டப்பட்டனவோ அல்லது அத்தகைய பொறுப்படைவுகளும் கடமைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டனவோ அந்த நோக்கங்கள் அதன் பின்பு ஒன்றியத்துப் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எதனைப் பொறுத்தும் இந்திய அரசாங்கத்தின் நோக்கங்களாக இருக்குமாயின், அவை இந்திய அரசாங்கத்தின் உரிமைகளாகவும் பொறுப்படைவுகளாகவும் கடமைப்பாடுகளாகவும் இருக்கும்.

(2) மேலே கண்டவற்றிற்கு உட்பட்டு, இந்த அரசமைப்பின் தொடக்க நிலையிலிருந்து, (1) ஆம் கூறில் குறிப்பிடப்பட்டவை அல்லாத பிற சொத்து, சொத்திருப்புகள் ஆகிய அனைத்தையும் மற்றும் அனைத்து உரிமைகளும் பொறுப்படைவுகளும் கடமைப்பாடுகளும் ஒப்பந்தம் ஒன்றிலிருந்து எழுந்தவையாயினும் பிறவாறாயினும் அவை அனைத்தையும் பொறுத்து, முதலாம் இணைப்புப்பட்டியலில் ஆ பகுதியில் குறித்துரைக்கப்பட்டுள்ள மாநிலம் ஒவ்வொன்றின் அரசாங்கமும் அதற்கு நேரிணையான இந்தியக் குறுநிலஅரசாங்கத்திற்குப் பின்னமைவுற்ற அரசாங்கமாக இருக்கும்.

296. வாரிசு இல்லாமை அல்லது உரிமைகோருநர் இல்லாமை அல்லது உரிமைக்குற்றவர் இல்லாமை காரணமாக சேர்ந்தடையும் சொத்து :

இதன்பின்பு வகைசெய்யப்பட்டுள்ளதற்கு உட்பட்டு, இந்திய ஆட்சிநிலவரையிலுள்ள சொத்து எதுவும், இந்த அரசமைப்பு செயற்பாட்டுக்கு வாராதிருப்பின், வாரிசு இல்லாமை அல்லது உரிமை கோருநர் இல்லாமை அல்லது உரிமைக்குற்றவர் இல்லாமை காரணமாக மாட்சிமை தங்கிய மன்னரிடம் அல்லது நேர்வுக்கேற்ப, இந்தியக் குறுநிலம் ஒன்றன் அரசரிடம் சேர்ந்தடைந்திருக்குமாயின், அது மாநிலம் ஒன்றில் அமைந்துள்ள சொத்தாக இருப்பின், அத்தகைய மாநிலத்திடமும், பிற நேர்வு எதிலும் ஒன்றியத்திடமும் உற்றமையும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/158&oldid=1468693" இலிருந்து மீள்விக்கப்பட்டது