பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169


358. நெருக்கடிநிலைகளின்போது 19ஆம் உறுப்பின் வகையங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தல் :

போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு காரணமாக இந்தியாவின் அல்லது அதன் ஆட்சிநிலவரைப்பகுதி எதனின் பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைந்துள்ளது என விளம்புகிற நெருக்கடி நிலைச்சாற்றாணை ஒன்று செயற்பாட்டிலிருக்குங்கால், 19ஆம் உறுப்பில் உள்ள எதுவும், III ஆம் பகுதியில் பொருள்வரையறை செய்யப்பட்டவாறான அரசு, அந்தப்பகுதியில் அடங்கியுள்ள வகையங்கள் இல்லாதிருந்தால், சட்டங்களை இயற்றுவதற்கும் ஆட்சித் துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எவ்வாறு தகுதிறம் கொண்டிருக்குமோ அவ்வாறே சட்டங்களை இயற்றுவதற்கும் ஆட்சித் துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசுக்குள்ள அதிகாரத்தை வரையறுப்பதில்லை; ஆனால், அவ்வாறு இயற்றப்பட்ட சட்டம் எதுவும், அந்தச் சாற்றாணையின் செயற்பாடு அற்றுப்போன உடனேயே அரசின் தகுதிறமின்மையின் அளவுக்குச் செல்திறம் அற்றுப்போகும்; எனினும், அவ்வாறு அச்சட்டம் செல்திறம் அற்றுப் போவதற்கு முன்பு செய்யப்பட்ட அல்லது செய்யாது விடப்பட்ட எதுவும் பாதிக்கப்படுவதில்லை:

வரம்புரையாக: அத்தகைய நெருக்கடிநிலைச் சாற்றாணை இந்திய ஆட்சிநிலவரையின் ஒரு பகுதியில் மட்டுமே செயற்பாட்டில் இருக்குமிடத்து, அந்த நெருக்கடிநிலைச் சாற்றாணை செயற்பாட்டிலுள்ள இந்திய ஆட்சி நிலவரையின் அப்பகுதியில் நடைபெறும் அல்லது அதன் தொடர்பாக நடைபெறும் செயல்களால், இந்தியாவின் அல்லது அதன் ஆட்சிநிலவரைப்பகுதி எதனின் பாதுகாப்பிற்கும் ஆபத்து எழுமாயின், அவ்வாறு எழும் அளவிற்கு, அந்த நெருக்கடிநிலைச் சாற்றாணை செயற்பாட்டில் இல்லாதிருக்கிற மாநிலம் அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரை ஒன்றில் அல்லது அதன் பகுதி எதிலும் அல்லது அதன் தொடர்பாக, இந்த உறுப்பின்படி அத்தகைய சட்டம் எதுவும் இயற்றப்படலாம்; அல்லது அத்தகைய ஆட்சித் துறை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படலாம்.

(2). (1) ஆம் கூறில் உள்ள எதுவும்

(அ) சட்டம் ஒன்று இயற்றப்படும்போது செயற்பாட்டிலிருக்கும் நெருக்கடிநிலைச் சாற்றாணைக்கு அச்சட்டம் தொடர்புடையது என்ற ஒரு வாசகத்தினைக் கொண்டிராத அத்தகைய சட்டம் எதற்கும், அல்லது
(ஆ) அத்தகைய வாசகத்தினைக் கொண்டிருக்கும் ஒரு சட்டத்தின்படி அல்லாமல் பிறவாறு மேற்கொள்ளப்பட்ட ஆட்சித் துறை நடவடிக்கை எதற்கும் பொருந்துறுவதில்லை.

359. நெருக்கடிநிலைகளின் போது IIIஆம் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகள் செயலுறுத்தப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் :

(1) நெருக்கடிநிலைச் சாற்றாணை ஒன்று செயற்பாட்டிலிருக்குமிடத்து, குடியரசுத் தலைவர், ஆணையின்வழி, (20, 21 ஆகிய உறுப்புகளைத் தவிர்த்து) IIIஆம் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளில், அந்த ஆணையில் குறிப்பிடப்படும் உரிமைகளைச் செயலுறுத்துவதற்கென நீதிமன்றம் எதிலும் நடவடிக்கை தொடர்வதற்குள்ள உரிமையும், அவ்வாறு குறிப்பிடப்பட்ட உரிமைகளைச் செயலுறுத்துவதற்கென நீதிமன்றம் எதிலும் முடிவுறாநிலையிலுள்ள நடவடிக்கைகள் அனைத்தும், அச்சாற்றாணை செல்லாற்றலிலுள்ள காலஅளவுக்கு அல்லது அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் குறைந்த காலஅளவுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என விளம்பலாம்.

(1அ). (20, 21 ஆகிய உறுப்புகளைத் தவிர்த்து) II1ஆம் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளில் எதனையும் குறிப்பிட்டு (1)ஆம் கூறின்படி பிறப்பிக்கப்படும் ஓர் ஆணை செயற்பாட்டிலிருக்குங்கால், அந்த உரிமைகளை வழங்குகிற அப்பகுதியிலுள்ள எதுவும், மேற்சொன்ன IIIஆம் பகுதியில் பொருள்வரையறைசெய்யப்பட்டவாறான அரசு, அப்பகுதியில் அடங்கியுள்ள வகையங்கள் இல்லாதிருந்தால், சட்டங்களை இயற்றுவதற்கும் ஆட்சித் துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எவ்வாறு தகுதிறம் கொண்டிருக்குமோ அவ்வாறே சட்டங்களை இயற்றுவதற்கும் ஆட்சித் துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கும், அந்த அரசிற்குள்ள அதிகாரத்தை வரையறுப்பதில்லை; ஆனால், அவ்வாறு இயற்றப்பட்ட சட்டம் எதுவும், மேற்சொன்ன ஆணை செயற்படுவது அற்றுப்போனவுடனேயே, அரசின் தகுதிறமின்மையின் அளவுக்கு, செல்திறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/195&oldid=1469040" இலிருந்து மீள்விக்கப்பட்டது