பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177



(17) "ஓய்வூதியம்” என்பது, பங்களிப்பு முறையிலாயினும் இல்லாவிடினும், ஒருவருக்கு அல்லது அவர் பொறுத்துச் செலுத்தப்பட வேண்டிய எவ்வகையானதுமான ஓர் ஓய்வூதியம் என்று பொருள்படும்; மேலும், அது அவ்வாறு செலுத்தப்பட வேண்டிய ஓய்வுக்காலச் சம்பளத்தையும், அவ்வாறு செலுத்தப்பட வேண்டிய ஒரு பணிக்கொடையையும், வருங்கால வைப்பு நிதியம் ஒன்றுக்கான தொகையளிப்புகளை அவற்றின் மீதான வட்டியுடனோ இன்றியோ அல்லது பிறதொகை எதனையும் சேர்த்தோ அவ்வாறு திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய தொகை எதனையும் அல்லது தொகைகளையும் உள்ளடக்கும்;

(18) “நெருக்கடிநிலைச் சாற்றாணை" என்பது, 352ஆம் உறுப்பின் (1)ஆம் கூறின்படி பிறப்பிக்கப்படும் ஒரு சாற்றாணை என்று பொருள்படும்;

(19) “பொது அறிவிக்கை” என்பது, இந்திய அரசிதழில் அல்லது, நேர்வுக்கேற்ப, ஒரு மாநிலத்தின் அதிகாரமுறை அரசிதழில் உள்ள ஓர் அறிவிக்கை என்று பொருள்படும்;

(20) "இருப்பூர்தியம்” என்பது__

(அ) முற்றிலும் ஒரு நகராட்சிப் பகுதிக்குள் அமைந்த காந்த வண்டிப்பாதையை; அல்லது

(ஆ) முற்றிலும் ஒரே மாநிலத்திற்குள் அமைந்துள்ளதும், இருப்பூர்தியம் அல்லாதது என நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்புகிறதுமான பிற போக்குவரத்துப் பாதை எதனையும் உள்ளடக்காது;

'[(21). * * *]

(22) "அரசர்" என்பது, 1971ஆம் ஆண்டு அரசமைப்பு (இருபத்தாறாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலைக்கு முன்பு எச்சமயத்திலேனும் இந்தியக் குறுநிலம் ஒன்றன் அரசர் எனக் குடியரசுத்தலைவரால் ஏற்பளிக்கப்பட்ட மன்னர், குடித்தலைவர் அல்லது பிறர் ஒருவர் என்றோ, அத்தகைய தொடக்கநிலைக்கு முன்பு எச்சமயத்திலேனும், அத்தகைய அரசரின் வழிவந்தவர் எனக் குடியரசுத்தலைவரால் ஏற்பளிக்கப்பட்டவர் என்றோ பொருள்படும்;

(23) “இணைப்புப்பட்டியல்” என்பது, இந்த அரசமைப்பின் ஓர் இணைப்புப்பட்டியல் என்று பொருள்படும்;

(24) "பட்டியலில் கண்ட சாதிகள்” என்பது, இந்த அரசமைப்பினைப் பொறுத்தவரை, 341ஆம் உறுப்பின்படி பட்டியலில் கண்ட சாதிகள் எனக் கொள்ளப்படுகின்ற சாதிகள், இனங்கள் அல்லது பழங்குடிகள் அல்லது அத்தகைய சாதிகள், இனங்கள், பழங்குடிகள் இவற்றின் பகுதிகள் அல்லது தொகுதிகள் என்று பொருள்படும்;

(25) “பட்டியலில் கண்ட. பழங்குடிகள்” என்பது, இந்த அரசமைப்பினைப் பொறுத்தவரை, 342ஆம் உறுப்பின்படி பட்டியலில் கண்ட பழங்குடிகள் எனக் கொள்ளப்படுகிற பழங்குடிகள் அல்லது பழங்குடிச் சமூகங்கள், அத்தகைய பழங்குடிகள் அல்லது பழங்குடிச் சமூகங்கள் இவற்றின் பகுதிகள் அல்லது தொகுதிகள் என்று பொருள்படும்;

(26) “காப்புறுதிகள்" என்பது, பங்கு மூலதனத்தையும் உள்ளடக்கும்;

(27) "உட்கூறு” என்பது, அச்சொல் இடம்பெறுகிற கூறின் ஓர் உட்கூறு என்று பொருள்படும்;

(28) “வரிவிதிப்பு" என்பது, பொதுவியலான அல்லது உள்ளாட்சிக்குற்ற அல்லது தனிவகையான வரி அல்லது தீர்வை எதனையும் விதிப்பதை உள்ளடக்கும்; மேலும் "வரி" என்பதும், அதற்கிணங்கப் பொருள்கொள்ளப்படும்;

(29) “வருமானம் மீதான வரி" என்பது, ஒரு மிகை ஆதாய வரி போல்வதான ஒரு வரியையும் உள்ளடக்கும்;

______________________________________________ 1.1956ஆம் ஆண்டு அரசமைப்பு (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் 29ஆம் பிரிவினாலும் இணைப்புப்பட்டியலினாலும் விட்டுவிடப்பட்டது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/203&oldid=1469015" இலிருந்து மீள்விக்கப்பட்டது