பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178



(29 அ) "சரக்குகளின் விற்பனை அல்லது கொள்வினை மீதான வரி" என்பது

(அ) உடன் பணத்திற்காக, பின் செலுத்தத்திற்காக அல்லது வேறுவகை மதிப்புள்ள மறுபயனுக்காக ஓர் ஒப்பந்தம் எதனையும் பின்பற்றியல்லாமல் பிறவாறு சரக்குகள் எவற்றிலும், சொத்து உரிமைமாற்றம் செய்வதன் மீதான் வரி;

(ஆ) ஒரு பணிமான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் உள்ளடங்கும் (சரக்குகளாகவோ பிறவடிவிலோ இருக்கும் சரக்குகள் எவற்றிலும், சொத்து உரிமைமாற்றம் செய்வதன் மீதான வரி;

(உ) தவணைமுறைக் கொள்வினை அல்லது தவணைச் செலுத்தமுறை வாயிலாகச் சரக்குகளை ஒப்படைவு செய்வதன் மீதான வரி;

(ஊ) உடன் பணத்திற்காக, பின் செலுத்தத்திற்காக அல்லது வேறு வகை மதிப்புள்ள மறுபயன் எதற்காகவும் (குறித்த ஒரு காலஅளவுக்காயினும், இல்லாவிடினும்) சரக்குகள் எவற்றையும் பயன்படுத்தும் உரிமையினை மாற்றம் செய்வதன் மீதான வரி; கூட்டுருமாக இல்லாத கழகம் அல்லது நபர்களின் குழுமம் எதனாலும் அதன் உறுப்பினர் ஒருவருக்கு உடன் பணம், பின்செலுத்தம் அல்லது வேறுவகை மதிப்புள்ள மறுபயனுக்காக வழங்கப்படும் சரக்குகள் மீதான வரி;

(ஊ) உடன் பணத்திற்காக, பின் செலுத்தத்திற்காக அல்லது வேறு வகை மதிப்புள்ள மறுபயனுக்காக, பயன்தரு பணியாகவோ அதன் பகுதியாகவோ வேறு முறையிலோ வழங்கப்படும் அல்லது மக்கள்நுகரும் பிற பொருள், அல்லது (போதையூட்டுவதாகவோ அல்லாததாகவோ உள்ள) குடிவகைகள், இவ்வகைச் சரக்குகள் மீதான வரி

ஆகியவற்றை உள்ளடக்கும்; மேலும், சரக்குகள் எவற்றையும் அவ்வாறு உரிமைமாற்றம், ஒப்படைவு அல்லது வழங்குதல் செய்வது எதுவும், அந்த உரிமைமாற்றத்தை, ஒப்படைவினை அல்லது வழங்குதலைச் செய்தவரால் செய்யப்படும் அச்சரக்குகளின் ஒரு விற்பனை எனவும், அந்த உரிமைமாற்றத்தை, ஒப்படைவை அல்லது வழங்குதலைப் பெறுபவரால் செய்யப்படும் அச்சரக்குகளின் கொள்வினை எனவும் கொள்ளப்படும்;

(30) "ஒன்றியத்து ஆட்சிநிலவரை” என்பது, முதலாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒன்றியத்து ஆட்சிநிலவரை என்று பொருள்படும், மேலும், அது இந்திய ஆட்சிநிலவரையினுள் அடங்கியுள்ள, ஆனால் அந்த இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டிராத பிற ஆட்சிநிலவரை எதனையும் உள்ளடக்கும்.

367. பொருள்கோள் :

(1) தறுவாயின் தேவை வேறானாலன்றி, 1897ஆம் ஆண்டு பொது வகையங்கள் விளக்கச் சட்டமானது, இந்தியத் தன்னாட்சியச் சட்ட மன்றத்துச் சட்டம் எதனையும் பொருள்காண்பதற்குப் பொருந்துறுவது போன்றே, அதில், 372ஆம் உறுப்பின்படி செய்யப்படும் தழுவமைவுகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டு, இந்த அரசமைப்பினைப் பொருள்காண்பதற்கும் பொருந்துறுவதாகும்.

(2) நாடாளுமன்றத்தின் அல்லது அதனால் செய்யப்பட்ட இயற்றுச்சட்டங்கள் அல்லது சட்டங்கள் அல்லது ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் அல்லது அதனால் செய்யப்பட்ட இயற்றுச்சட்டங்கள் அல்லது சட்டங்கள் என இந்த அரசமைப்பில் சுட்டப்பட்டிருப்பது எதுவும், குடியரசுத்தலைவரால் பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டம் அல்லது, நேர்வுக்கேற்ப, ஆளுநரால் பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டம் எனச் சுட்டுவதையும் உள்ளடக்குவதாகப் பொருள்கொள்ளுதல்வேண்டும்.

(3) இந்த அரசமைப்பினைப் பொறுத்தவரை,"அயல் நாட்டு அரசு” என்பது, இந்தியா அல்லாத பிற அரசு எதுவும் என்று பொருள்படும்:

வரம்புரையாக: நாடாளுமன்றம் இயற்றிய சட்டம் எதனின் வகையங்களுக்கும் உட்பட்டு, குடியரசுத்தலைவர், ஆணையின்வழி, அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் நோக்கங்களுக்காக, அரசு எதுவும் அயல் நாட்டு அரசு ஆவதில்லை என விளம்பலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/204&oldid=1469023" இலிருந்து மீள்விக்கப்பட்டது