பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

217


[1][3.அ. சட்டங்களியற்றுவதற்கு வடக்கு கச்சார் குன்றுகள் தன்னாட்சி மன்றங்களின் மற்றும் கர்பி ஆங்குலாங்கு தன்னாட்சி மன்றங்களின் கூடுதல் அதிகாரங்கள் :

(1). 3ஆம் பிரிவின் வகையங்களுக்குப் குந்தகமின்றி, வடக்கு கச்சார் குன்றுகள் தன்னாட்சி மன்றம், மற்றும் கர்பி ஆங்குலாங்கு தன்னாட்சி மன்றம், முறையே தத்தம் மாவட்டங்களில்

(அ)ஏழாம் இணைப்புப்பட்டியலின் பத்தி 1 இன் 7, 52 ஆகிய பதிவுகளின் வகையங்களுக்கு உட்பட்டு, தொழில்கள்;
(ஆ) போக்குவரவு இணையங்கள், அதாவது, சாலைகள், பாலங்கள், தோணித்துறைகள் மற்றும் ஏழாம் இணைப்புப்பட்டியலின் 1 ஆம் பட்டியலில் குறித்துரைக்கப்படாத பிற போக்குவரவு இணையங்கள், நகராட்சி காந்தவண்டிப் பாதைகள், கம்பிவடவழிகள், உள்நாட்டு நீர் வழிகள், அத்தகைய நீர்வழிகள் பொறுத்து, ஏழாம் இணைப்புப்பட்டியலின் 1 ஆம் பட்டியலின் மற்றும் II ஆம் பட்டியலின் வகையங்களுக்கு உட்பட்டு, அதன் போக்குவரத்து, இயந்திரத்தால் இயக்கப்படும் ஊர்தியல்லாத பிற ஊர்திகள்;
(இ)கால்நடைகளைப் பேணுதல், பாதுகாத்தல், மேம்படுத்துதல், விலங்கு நோய்த்தடுப்பு, விலங்கின மருத்துவப் பயிற்சியும் தொழிலும்; கால்நடைப் பட்டிகள்;
(ஈ) முதனிலை மற்றும் இடைநிலைக் கல்வி;
(உ)வேளாண் கல்வி, ஆராய்ச்சி பூச்சிக் கொல்லிகளுக்கு எதிரான பாதுகாப்பு, பயிர் நோய்த் தடுப்பு உள்ளடங்கலாக, வேளாண்மை.
(ஊ)மீனளங்கள்;
(எ)நீர், அதாவது, ஏழாம் இணைப்புப்பட்டியலின் 1 ஆம் பட்டியலிலுள்ள 56 ஆம் பதிவிலுள்ள வகையங்களுக்கு உட்பட்டு, நீர்வழங்குதல், பாசனம், கால்வாய்கள், சாக்கடை வசதி, கரையணைகள், நீர்த்தேக்கங்கள், புனல்மின்விசை ஆகியவை;
(ஏ)சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூகக் காப்பீடு; வேலை வாய்ப்பு மற்றும் வேலையின்மை;
(ஐ)கிராமம், நெல் வயல்கள், அங்காடிகள், நகரங்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்கான (தொழில் நுட்பத்தன்மையல்லாத) வெள்ளக்கட்டுப்பாடு திட்டங்கள்;
(ஒ)திரையரங்கு மற்றும் நாடக நிகழ்ச்சிகள், ஏழாம் இணைப்புப்பட்டியலின் 1 ஆம் பட்டியலின் 60 ஆம் பதிவின் வகையங்களுக்கு உட்பட்டு, திரைப்படங்கள், விளையாட்டுகள், கேளிக்கைகள், பொழுதுபோக்குகள்;
(ஓ)பொதுநலம் மற்றும் துப்புரவு, மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்கள்;
(ஔ) சிறுபாசனம்;
(க)உணவுப்பொருட்கள், கால்நடைத்தீவனம், பஞ்சு, சணல் போன்றவற்றை உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும் பங்கீடு செய்தல்; மேலும் இவற்றில் வணிகம் மற்றும் வாணிபம்;
(ங) மாநிலத்தின் கட்டாள்கையிலுள்ள அல்லது மாநிலத்தின் நிதி உதவி பெறுகிற நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் இவையன்ன பிற நிறுவனங்கள்; தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தாலோ அதன் வழியாலோ விளம்பப்படுபவை நீங்கலாக, தொன்மையுடையவை, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பிற நினைவுச் சின்னங்கள்: மற்றும்
(ச) நிலத்தைப் பிறர்க்குரிமை மாற்றம் செய்தல்;

ஆகியவை பொறுத்து சட்டங்கள் இயற்றுவதற்கு அதிகாரம் கொண்டிருக்கும்.


  1. 1995 ஆம் ஆண்டு அரசமைப்பின் ஆறாம் இணைப்புப்பட்டியலுக்கான (திருத்தம்) சட்டத்தால் (42/1995) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/243&oldid=1467225" இலிருந்து மீள்விக்கப்பட்டது