பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226


(இ)வட்டித் தொழில் நடத்துவோரால் கணக்குகள் வைத்து வரப்படுவதற்கும் மாவட்ட மன்றம் இதற்கென அமர்த்தும் அலுவலர்களால் அத்தகைய கணக்குகள் ஆய்வு செய்யப்படுவதற்கும் ஏற்பாடு செய்யலாம்;
(ஈ) அந்த மாவட்டத்தில் குடியிருக்கிற பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஒருவராக இல்லாத எவரும், அந்த மாவட்ட மன்றத்தினால் இதற்கென வழங்கப்படும் உரிமத்தின்படி அல்லாமல், எந்தப் பண்டத்தையும் மொத்தமாகவோ சில்லறையாகவோ ஆகுதொழில் செய்தலாகாது என வகுத்துரைக்கலாம்;

வரம்புரையாக: இந்தப் பத்தியின்படி ஒழுங்குறுத்தும்விதிகள் எவையும், மாவட்ட மன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் நான்கில் மூன்று பகுதியினருக்குக் குறையாத பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட்டாலன்றி, வகுக்கப்படுதல் ஆகாது;

மேலும் வரம்புரையாக: அத்தகைய ஒழுங்குறுத்தும்விதிகள் வகுக்கப்படுவதற்கு முன்பிருந்தே அந்த மாவட்டத்திற்குள் தொழில் நடத்தி வருகிற வட்டித்தொழில் நடத்துவோருக்கோ வணிகருக்கோ அத்தகைய ஒழுங்குறுத்தும்விதிகளின்படி உரிமம் வழங்க மறுத்தல் ஆகாது.

(3) இந்தப் பத்தியின்படி வகுக்கப்படும் ஒழுங்குறுத்தும்விதிகள் அனைத்தும் உடனடியாக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும்; மேலும், அவரால் ஏற்பிசைவளிக்கப்படும் வரையில், அவை செல்திறம் பெறுவதில்லை.

[1](4) இந்தப் பத்தியிலுள்ள எதுவும் இந்த இணைப்புப்பட்டியலின் 2ஆம் பத்தியின் (3)ஆம் உள்பத்தியின் வரம்புரையின்படி அமைக்கப்பட்ட போடோலாந்து ஆட்சிநிலவரை மன்றத்திற்குப் பொருந்தாது.]

11. இந்த இணைப்புப்பட்டியலின்படி இயற்றப்படும் சட்டங்கள், விதிகள், ஒழுங்குறுத்தும் விதிகள் ஆகியவற்றை வெளியிடுதல் :

ஒரு மாவட்ட மன்றத்தாலோ ஒரு வட்டார மன்றத்தாலோ இந்த இணைப்புப்பட்டியலின்படி இயற்றப்படும் சட்டங்கள், விதிகள், ஒழுங்குறுத்தும்விதிகள் அனைத்தும், உடனடியாக மாநிலத்தின் அதிகாரமுறை அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்; மேலும், அவ்வாறு வெளியிடப்படுவதன் மேல் அவை சட்டத்தின் செல்லாற்றல் உடையன ஆகும்.

12. அசாம் மாநிலத்திலுள்ள தன்னாட்சி மாவட்டங்கள், தன்னாட்சி வட்டாரங்கள் ஆகியவற்றிற்கு நாடாளுமன்றச் சட்டங்களும் அசாம் மாநிலச் சட்டமன்றச் சட்டங்களும் பொருந்துறுதல் :

(1) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்—

(அ)எந்தப் பொருட்பாடுகளைப் பொறுத்து ஒரு மாவட்ட மன்றம் அல்லது வட்டார மன்றம் சட்டங்களை இயற்றுவதற்குரியவை என இந்த இணைப்புப்பட்டியலின் 3ஆம் பத்தியில் [2][அல்லது 3அ பத்தியில்] [2][அல்லது 3ஆ பத்தியில்) குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்த, அசாம் மாநிலச் சட்டமன்றச் சட்டம் எதுவும், காய்ச்சிவடிக்கப்படாத வெறியம் கலந்த மதுக்குடிவகை எதனையும் உட்கொள்ளுவதைத் தடைசெய்கிற அல்லது கட்டுப்படுத்துகிற அசாம் மாநிலச் சட்டமன்றச் சட்டம் எதுவும், அத்தகைய மாவட்டத்திற்கான அல்லது அத்தகைய வட்டாரத்தின் மீது அதிகாரவரம்பு கொண்டுள்ள மாவட்ட மன்றம், பொது அறிவிக்கை வாயிலாக, இரு நேர்வுகளில்


  1. 1995 ஆம் ஆண்டு அரசமைப்பு ஆறாம் இணைப்புப்பட்டியலுக்கான (திருத்தம்) சட்டத்தினால் (42/1995) புகுத்தப்பட்டது.[
  2. 2.0 2.1 2003 ஆம் ஆண்டு அரசமைப்பு ஆறாம் இணைப்புப்பட்டியலுக்கான (திருத்தம்) சட்டத்தினால் (44/2003) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/252&oldid=1466810" இலிருந்து மீள்விக்கப்பட்டது