பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

251


ஒன்பதாம் இணைப்புப்பட்டியல்
(31ஆ உறுப்பு)

1. 1950 ஆம் ஆண்டு பீகார் நிலச் சீர்த்திருத்தங்கள் சட்டம் (பீகார் சட்டம் XXX/1950).
2. 1948 ஆம் ஆண்டு பம்பாய் குத்தகையுரிமை மற்றும் வேளாண் நிலங்கள் சட்டம் (பம்பாய் சட்டம் LXVII/1948).
3. 1949 ஆம் ஆண்டு பம்பாய் மாலிகி நிலப்பிடிமானமுறை ஒழிப்புச் சட்டம் (பம்பாய் சட்டம் LX1/1949).
4. 1949 ஆம் ஆண்டு பம்பாய் தாலுக்தாரி நிலப்பிடிமானமுறை ஒழிப்புச் சட்டம் (பம்பாய் சட்டம் LXII/1949).
5. 1949 ஆம் ஆண்டு பஞ்ச் மஹல்கள் மேஹ்வாசி நிலப்பிடிமானமுறை ஒழிப்புச் சட்டம் (பம்பாய் சட்டம் LXIII/1949).
6. 1950 ஆம் ஆண்டு பம்பாய் கோதீ ஒழிப்புச் சட்டம் (பம்பாய் சட்டம் VI/1950).
7. 1950 ஆம் ஆண்டு பம்பாய் பரகானா மற்றும் குல்கர்னி வதன் ஒழிப்புச் சட்டம் (பம்பாய் சட்டம் LX/1950).
8. 1950 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச நிலவுடைமை உரிமைகள் ஒழிப்பு (உரிமை நிலச் சொத்துக்கள், மஹல்கள், மாற்றாக்கம் செய்யப்பட்ட நிலங்கள்) சட்டம் (மத்தியப் பிரதேசச் சட்டம் 1/1951).
9. 1948 ஆம் ஆண்டு சென்னை உரிமைநிலச் சொத்துகள் (ஒழிப்பு மற்றும் நேர்க்குடிவாரமுறையாக நிலைமாற்றம்) சட்டம் (சென்னைச் சட்டம் XXVI/1948).
10. 1950 ஆம் ஆண்டு சென்னை உரிமைநிலச் சொத்துகள் (ஒழிப்பு மற்றும் நேர்க்குடிவாரமுறையாக நிலைமாற்றம்) திருத்தச் சட்டம் (சென்னைச் சட்டம் 1/1950).
11. 1950 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச ஜமீன்தாரி ஒழிப்பு மற்றும் நிலச் சீர்திருத்தங்கள் சட்டம் (உத்தரப்பிரதேசச் சட்டம் 1/1951).
12. 1358 ஆம் பசலி ஐதராபாத் (ஜாகீர்கள் ஒழிப்பு) ஒழுங்குறுத்தும்விதி (எண் LXIX/ 1358 பசலி).
13. 1359 ஆம் பசலி ஐதராபாத் ஜாகீர்கள் (இனமாற்றுதல்) ஒழுங்குறுத்தும்விதி (எண் XXV/1359 பசலி).
14. 1950 ஆம் ஆண்டு பீகார் இடம் பெயர்ந்தவர்களின் மறுவாழ்வளிப்பு (நிலம் கையகப்படுத்துதல்) சட்டம் (பீகார் சட்டம் XXXVIII/1950)
15. 1948 ஆம் ஆண்டு ஐக்கிய மாகாணங்கள் நிலம் கையகப்படுத்துதல் (அகதிகள் மறுவாழ்வளிப்பு சட்டம் (ஐ.மா. சட்டம் XXVI/1948).
16. 1948 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்தவர்களின் மறுகுடியமர்வு (நிலம் கையகப்படுத்துதல்) சட்டம் (சட்டம் LX/1948).
17. 1938 ஆம் ஆண்டு காப்பீடு சட்டத்தின் (சட்டம் IV/1938) 52அ முதல் 52௭ வரை உள்ள பிரிவுகள்—1950 ஆம் ஆண்டு காப்பீடு (திருத்தம்) சட்டத்தின் (சட்டம் XLVII/ 1950) 42 ஆம் பிரிவினால் புகுத்தப்பட்டது.
18. 1951 ஆம் ஆண்டு இருப்பூர்திய நிறுமங்கள் (நெருக்கடிநிலை வகையங்கள்) சட்டம் (சட்டம் I/1951).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/277&oldid=1466851" இலிருந்து மீள்விக்கப்பட்டது