பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

271


[1][பன்னிரண்டாம் இணைப்புப்பட்டியல்

(243ய-ஆம் உறுப்பு)

  1. நகர்ப்புற திட்டமிடுதல் உள்ளடங்கலான நகரகத் திட்டமிடுதல்.
  2. நிலப்பயன்பாட்டை ஒழுங்குறுத்துதல் மற்றும் கட்டடங்களைக் கட்டுதல்.
  3. பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குத் திட்டமிடுதல்.
  4. சாலைகளும் பாலங்களும்.
  5. வீடு, தொழிற்சாலை, வணிகம் ஆகியவற்றின் நோக்கங்களுக்காக நீர் வழங்குதல்,
  6. மக்கள் நல்வாழ்வும் துப்புரவு பேணுதலும் மற்றும் திடக்கழிவு மேலாண்மை.
  7. தீயணைப்பு சேவைகள்.
  8. நகரகக் காணிகங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு. உயிரின வாழ்க்கைச் சூழல்களை மேம்படுத்துதல்.
  9. ஊனமுற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் உள்ளடங்கலாகச் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களுக்கான நலன்களைப் பாதுகாத்தல்.
  10. குடிசைப் பகுதி மேம்பாடு மற்றும் தரம் உயர்த்துதல்.
  11. நகரக வறுமைத் துயர் தவிப்பு
  12. பூங்காக்கள், தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற நகரக வசதிகள் மற்றும் வள வசதிகள்.
  13. பண்பாடு, கல்வி, கலை சார்ந்த துறைகளை மேம்படுத்துதல்.
  14. புதைத்தலும், இடுகாடுகளும் எரியூட்டுதலும் சுடுகாடுகள் மற்றும் மின்சார சுடுகாடுகள்.
  15. கால்நடைத் தொழுவங்கள்; விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதைத் தடுத்தல்.
  16. பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்தல் உள்ளடங்களான பிறப்பு-இறப்பு புள்ளி விவரங்கள்.
  17. தெரு விளக்கிடுதல், வண்டி நிறுத்துமிடங்கள், பேருந்து நிறுத்தங்கள், பொதுக் கழிப்பிடங்கள் உள்ளடங்கலான பொது வசதிகள்.
  18. இறைச்சிக் கொட்டில்களையும் தோல் பதனிடும் இடங்களையும் ஒழுங்குறுத்துதல்.]

  1. 1992 ஆம் ஆண்டு அரசமைப்புச் (எழுபத்தி நான்காம் திருத்தம்) சட்டத்தால் (1-6-1993 முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/297&oldid=1465004" இலிருந்து மீள்விக்கப்பட்டது