பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270


[1][பதினொன்றாம் இணைப்புப்பட்டியல்

(243 (எ) உறுப்பு)

  1. வேளாண்மை விரிவாக்கம் உள்ளடங்கலாக வேளாண்மை.
  2. நில மேம்பாடு, நிலச்சீர்த்திருத்தங்களைச் செயற்படுத்துதல், நில ஒருங்கிணைப்பு மற்றும் மண்வளப்பாதுகாப்பு.
  3. குறுநீர்ப்பாசனம், நீர் மேலாண்மை மற்றும் ஆற்றுப்பள்ளத்தாக்கின் மேம்பாடு. 4. கால்நடைப் பராமரிப்பு, பால்பண்ணை, கோழியின் வளர்ப்பு.
  4. மீன் வளங்கள்.
  5. சமூகக் காடுகள் மற்றும் பண்ணைக்காடுகள்.
  6. சிறுகாடுகளின் விளைபொருள்.
  7. உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளடங்கலான சிறுதொழில் நிறுவனங்கள்.
  8. காதி, கிராம மற்றும் குடிசைத்தொழில்கள்.
  9. ஊரக வீட்டுவசதி.
  10. குடிநீர்.
  11. எரிபொருள் மற்றும் கால்நடைத் தீவனம்.
  12. சாலைகள், தரைப்பாலங்கள், பாலங்கள், நீர்வழிகள் மற்றும் போக்குவரவுக்கான பிற வழிகள்.
  13. மின்பகிர்மானம் உள்ளடங்கலான, ஊரக மின் வசதி.
  14. மரபுசாரா எரிசக்தி வளங்கள்.
  15. வறுமை ஒழிப்புத்திட்டம்.
  16. முதல்நிலை மற்றும் இடைநிலைப் பள்ளிகள் உள்ளடங்கலாக, கல்வி.
  17. தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் வாழ்க்கைத் தொழிற்கல்வி.
  18. வயதுவந்தோருக்கான மற்றும் முறைசாரா கல்வி.
  19. நூலகங்கள்.
  20. பண்பாடு சார்ந்த நடவடிக்கைகள்.
  21. சந்தைகள் மற்றும் விழாக்கள்.
  22. மருத்துவமனைகள், முதன்மை சுகாதார மையங்கள் மற்றும் மருந்தகங்கள் உள்ளடங்கலாக சுகாதாரம் மற்றும் துப்புரவு.
  23. குடும்பநலன்.
  24. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு.
  25. ஊனமுற்றோர் மற்றும் மனச்சீர்கேடுற்றவர்களின் நல்வாழ்வு உள்ளடங்கலாக சமூக நல்வாழ்வு.
  26. நலிவடைந்த பிரிவினர்களின் குறிப்பாக, பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியிலில் கண்ட பழங்குடியினரின் நல்வாழ்வு.
  27. பொதுப் பங்கீட்டு முறை.
  28. சமுதாய சொத்திருப்புகளைப் பேணி வருதல்.]

  1. 1992 ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபத்து மூன்றாம் திருத்தம்) சட்டத்தால் (24-4-1993 முதல் செல்திறம் பெறுமாறு) சேர்க்கப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/296&oldid=1465007" இலிருந்து மீள்விக்கப்பட்டது