பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


(3) (1), (2) ஆகிய கூறுகளிலுள்ள எதுவும்—

(அ)அப்போதைக்குப் பகைநாட்டு அயலவராக இருக்கும் எவருக்கும், அல்லது
(அ)தடுப்புக் காவலுக்கு வகைசெய்யும் சட்டம் எதன்படியும் கைது செய்யப்பட்ட அல்லது காவலில் வைக்கப்பட்ட எவருக்கும்

பொருந்துறுவதில்லை.

(4) தடுப்புக் காவலுக்கு வகைசெய்யும் சட்டம் எதுவும், மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட காலஅளவிற்கு ஒருவரைக் காவலில் வைப்பதற்கு அதிகாரம் அளித்தல் ஆகாது; அவ்வாறு செய்வதாயின்-

(அ)உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருப்பவர்களையோ இருந்தவர்களையோ அவ்வாறு அமர்த்தப்பெறுவதற்குத் தகுதியுடையவர்களையோ கொண்ட ஓர் அறிவுரைக் குழுமம், மேற்சொன்ன மூன்று மாதக் காலஅளவு கழிவுறுவதன் முன்பு, அவ்வாறு காவலில் வைப்பதற்குப் போதிய காரணம் இருக்கிறது என்று தான் கருதுவதாக அறிக்கை அளித்திருக்க வேண்டும் :

வரம்புரையாக: இந்த உட்கூறிலுள்ள எதுவும், (7)ஆம் கூறின் (ஆ) உட்கூறின்படி நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் எதிலும் வகுத்துரைக்கப்படும் மேல்வரைக் காலஅளவு கடந்த பின்னரும் ஒருவரைக் காவலில் வைத்திருக்க அதிகாரம் அளித்தல் ஆகாது; அல்லது

(ஆ)(7)ஆம் கூறின் (அ), (ஆ) ஆகிய உட்கூறுகளின்படி நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் ஒன்றன் வகையங்களுக்கு இணங்க அத்தகையவர் காவலில் வைக்கப்பட்டிருக்கவேண்டும்.

(5) தடுப்புக் காவலுக்கு வகைசெய்யும் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணையைப் பின்பற்றி ஒருவர் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது, அந்த ஆணையைப் பிறப்பித்த அதிகாரஅமைப்பு, அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டதற்கான காரணங்களைக் கூடிய விரைவில் அவருக்குத் தெரிவித்தல் வேண்டும்; மேலும், அந்த ஆணையின்மீது உரையீடு செய்வதற்கு முந்துறு வாய்ப்பினை அவருக்கு அளித்தல் வேண்டும்.

(6) (5)ஆம் கூறிலுள்ள எதுவும், அந்தக் கூறில் சுட்டப்படும் ஆணை ஒன்றைப் பிறப்பிக்கும் அதிகாரஅமைப்பினை, பொதுநலனுக்கு எதிரானவை என பொருண்மைகளை வெளிப்படுத்துமாறு வேண்டுறுத்துவதில்லை. அது கருதும்

(7) நாடாளுமன்றம், சட்டத்தினால்—

(அ)தடுப்புக் காவலுக்கு வகைசெய்யும் சட்டம் ஒன்றன்படி, (4) ஆம் கூறின் (அ) உட்கூறின் வகையங்களுக்கு இணங்க அறிவுரைக் குழுமத்தின் கருத்துரையைப் பெறாமலேயே மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட காலஅளவிற்கு ஒருவர் காவலில் வைக்கப்படலாகும் சூழ்நிலைகள் எவை என்பதையும் மற்றும் அதற்கான நேர்வுகளின் வகை அல்லது வகைகள் எவை என்பதையும்,
(ஆ)தடுப்புக் காவலுக்கு வகைசெய்யும் சட்டம் ஒன்றன்படி எவ்வகையான அல்லது வகைகளான நேர்வுகளிலும் ஒருவர் காவலில் வைக்கப்படலாகும் மேல்வரைக் காலஅளவு என்ன என்பதையும், மற்றும்
(இ(4)ஆம் கூறின் (அ) உட்கூறின்படியான ஒரு விசாரணையில் அறிவுரைக் குழுமம் பின்பற்ற வேண்டிய நெறிமுறை என்ன என்பதையும்

வகுத்துரைக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/34&oldid=1465440" இலிருந்து மீள்விக்கப்பட்டது