பக்கம்:Harischandra.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) ஹரிச்சந்திரன் 27 நாளைத்தினம் அவனது அரண்மனைக்குப் போனவுடன்,அவன் வாக்களித்தபடி தனது ராஜ்யத்தை தானமாகக் கொடுப்பான். அதைப் பெற்றுக்கொண்டதும்-ஆம் ! அதுதான் யோசனை ! -அவனிடம் வைத்துவிட்டுப் போன அப் பெரும் பொரு ளைக் கொடுக்கும்படியாகக் கேட்கிறேன்! முன்பு கொடுத்ததும் அவனது ராஜ்யத்தில் உட்பட்டுப் போனபடியால், வேறு அத் தனே பொருள் கொடுக்கவேண்டுமென்று வற்புறுத்துகிறேன். அதற்கு என்ன சொல்லுகிருனே பார்ப்போம். இதனுல் என் வலையில் எப்படியும் சிக்குவான். பிறகு அவன் வாயி னின்றும் எவ்விதமாவது ஒரு அசத்தியத்தை எளிதில் வர வழைத்து விடலாம். ஆம்! இந்த யோசனை எனக்கு ஏன் முன்பே தோற்ருமற் போச்சுது சி-இனி என் பrம் ஜெயம் என்பதற் கையமில்லை! வசிஷ்டரே இனி நீர் தீர்த்த யாத்தி ரைக்குப் புறப்பட லக்னம் பார்க்கவேண்டியதுதான்! - (விரைந்து போகிரு.ர்.) காட்சி முடிகிறது. மூன்ரும் காட்சி இடம்-அயோத்தியில் ஹரிச்சந்திரன் கொலுமண்டபம். ஹரிச்சந்திரன்,சத்யகீர்த்தி முதலிய மந்திரிகள் புடைசூழ ஒரு புறம் நிற்கிருன். விஸ்வாமித்திார், நட்சத்திரேசன் முதலிய சிஷ்யர்களுடன், ஒருபுறம் கிற்கிருச். பரிவாரங்கள் இருமருங்கிலும் நிற்கின்றனர். வி. ஹரிச்சந்திரா, அவசரப்பட்டு ஒன்றும் செய்யாதே, ஆய்க் தோய்ந்து பாராத செய்யும் எக்கருமமும் இறுதியில் துக்கத்தைத்தான் விளக்கும். ஆகவே உனக்கிஷ்டமில்ல்ா விட்டால் இப்பொழுதே சொல்லிவிடு; நான் வற்புறுத்தவில்லை. ஹ. ஸ்வாமி, கொடுத்தது கொடுத்ததே இல்லையென்று வாய் கூசாது எவ்வாறு கூறுவது ? வி. ஆனல்-மனதில் ஒன்றுமில்லையே உனக்கு ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/33&oldid=726799" இலிருந்து மீள்விக்கப்பட்டது