பக்கம்:Harischandra.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6}}, 町。 ஹரிச்சந்திான் 3 தவறினலோ ? இவ் வீழ்ே புவனங்களும் தத்தம் நிலை தவறும். உம்முடைய சிஷ்யனுடைய ஆற்றலில் அவ்வளவு கம்பிக்கை யுண்டா ஆயின் அந்த சத்ய விரதத்தினின்றும் அவனத் தவறும்படிச் செய்கிறேன், பார்க்கிறீர்களா ? உம்மால் முடியாதென்று உறுதியாய் நம்புகிறேன். என்ன சொன்னீர் வசிஷ்டரே என்னல் முடியாத காரி யம் ஒன்றுளதோ இவ் விரேழ் புவனங்களிலும் ? அந்த ஹரிச்சந்திரன் தந்தைக்காக வேறு சுவர்க்கம் உண்டாக் கினவன் நான் என்பதை மறந்தீரோ ? : அன்யம் இந்திரம் கரிஷ்யாமி' என்று ஆரம்பித்த நான் , இந்த தேவராஜனது வேண்டுகோளுக் கிணங்கியன்ருே விடுத்தேன், என்பது ஞாபக மில்லையோ ? நன்ருய் ஞாபக மிருக்கிறது. ஆயினும் அவைகளை யெல்லாம் செய்ய, ஆற்ற லுடையீர், ஆயினும், ஹரிச்சந்திரனே சத்ய விரதத்தினின்றும் தவறச்செய்ய உமக்குச் சக்தி யில்லை யென்றே நம்புகிறேன். ஆனல் வசிஷ்டரே, தேவர்கள் சபையறிய இதோ ஒரு வார்த்தை சொல்லுகிறேன். அந்த உமது பிரிய சிஷ்யனுகிய ஹரிச்சந்திரனே அந்த சத்திய விரதத்தினின்றும் தவறும் படிச் செய்யாவிட்டால் என் பெயர் விஸ்வாமித்திரனன்று ! இப்பொழுது என்ன சொல்லுகிறீர் ? அப்படிச் செய்ய உம்மால் முடியுமாயின் என் பெயர் விசிஷ் டர் அன்று, என்று நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அடடா ! என்ன வசிஷ்டரே விஸ்வாமித்திரரே ! இதில் என்ன பிரயோஜனம் உங்களில் யார் தோற்றபோதிலும் உங்கள் பெயர் மாறிப்போமா என்ன ? ஆகவே, தோற்பவர் இன்னது செய்கிறது என்று ஏதாவது பந்தயம் கட்டினல், உங்களுக்கும் ஒழுங்கா யிருக்கும், பார்ப்பவர்களுக்கும் அழகா யிருக்கும். - அப்படியே தேவராஜனே ரிஷிகளே தேவர்களே ! கேட்பீராக வசிஷ்டரே, நீரும் கேளும். அந்த ஹரிச்சர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/9&oldid=726861" இலிருந்து மீள்விக்கப்பட்டது