பக்கம்:Harischandra.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஹரிச்சந்திான் (அங்கம்-4 உயிருடன் இருந்து பரிதபிக்கிருேம்-காமிழைத்த பாப பரி ஹாரமாக -நாம் என்ன வருந்தியும் என்ன பலன் மடிந்த மைந்தன் மறுபடியும் உயிர் பெறப் போகிருனே ?-நேரமாகி றது. இனி காலதாமதம் செய்யலாகாது-மடிந்த மைந்த னுடலே எப்படியும் தகனம் செய்யவேண்டும். அப்படிச் செய் யுமுன்-என் எஜமானனுக்குச் சோவேண்டிய கட்டணத் தைச் செலுத்தவேண்டும். அந்தோ காதா அதைச் செலுத்த என் கையில் ஒன்று மில் லேயே, நீர் அறியீரா ? சந்திரமதி, என் கடமைக்கு விரோதமாக நான் ஒருகாலும் நடக்கமுடியாது. அதைச் செலுத்தாதபடி தகனம் செய்ய நான் இசைவேயிைன் அது அசத்யமாகுமன்ருே ? ஆகவே அதைச் செலுத்த வகையில்லாவிட்டால்-இவ்வுடலே தகனம் செய்யலாகாது நாம். ஈசனே ! ஈசனே இவ்வுலகில் எங்களைப்போன்ற பாபிகளு மிருக்கிருர்களோ ? இறந்த மைந்தனச் சுட்டெரிக்கவும் கதி யின்றிக் கலங்குகிருேமே!- (அழுகிருள்.) கடவுளே! நீர் கண் உறங்குகிறீரோ?-அல்லது கருணு நிதி யென்று உமக்குப் பெயர் வைத்தது பொய்த்ததோ ? சந்திரமதி, அதைக் கேட்பதற்கு நாம் யார் அவரை நாம் அவ்வாறு கேட்பதற்கு நமக்கு சுதந்தாம் கிடையாது. அவரிச்சைப்படி நமக் கனுப்பி வைக்கும் இன்ப துன்பங்களை அனுபவிக்கத் தான் நமக்கு சுதந்தாமுண்டு. சந்திரமதி, நாம் வருந்தியாவ தொன்மமில்லை. ஆகவே வருந்துவானேன் ? அன்றியும் அவர் நமக்களித்த பொருளை அவர் மறுபடியும் எடுத்துக்கொள்ள அவருக்குச் சுதந்தா முண்டல்லவா ? உலக வாழ்க்கை யென்பது இத்தன்மையதே ; இதன் பொருட்டு துக்கிப்பது உன்மத்த மாகும். இனி தாமதியாதே, நான் சொல் வதைக்கேள் ; நள்ளிருள் என்று பாாாமல், உடனே புறப் பட்டுப்போய், உனது எஜமானனிடமிருந்து இக்கட்டணத்தை வாங்கிவா, அவர் கொடேன் என்று மறுக்க நியாயமில்லை. அடிமைப்பட்டவன் மரித்தால் அவனுக்குச் செய்யவேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/90&oldid=726862" இலிருந்து மீள்விக்கப்பட்டது