பக்கம்:Humorous Essays.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

ஹாஸ்ய வியாசங்கள்

காண்பார்கள். அதன் பெயர் என்னவென்று விசாரித்தால், “கிளைவ் பாட்டரி” என்று அறிவார்கள். ‘பாட்டரி’ என்னும் ஆங்கில பதத்திற்கு ‘பீரங்கிகள் வைக்குமிடம்’ என்று இந்தச் சந்தர்ப்பத்தில் அர்த்தமாகும். இது நமது ராஜாங்கத்தால் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக, சென்னையை எதிரிகள் சமுத்திரத்தின் வழியாக எதிர்த்தால் அவர்களைத் தடுக்க வேண்டி ஏராளமான திரவியம் செலவழித்துக் கட்டப்பட்டதாகும். கட்டிடம் மிகவும் பலமானது; எல்லாம் சரியாகத்தானிருக்கிறது:-பீரங்கி மாத்திரம்தான் இல்லை!

இதற்கு காரணம் என்னவென்று விசாரித்ததில், ராஜாங்க ராணுவ உத்தியோகஸ்தர்கள் இந்தப் பீரங்கிகளை மாத்திரம் வெளியே எந்த ஊருக்கோ எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம்! கட்டிடம் மாத்திரம் காலியாகவே இருக்கிறது. ஆயினும், கட்டிடம் ஒன்றிற்கும் உபயோகப் படாமற் போகவில்லை. சில வேலையாட்களும், அவர்கள் குடும்பங்களும் இங்கே வசித்து வருகிறார்கள். 1915-ம் வருஷத்தில் ஐரோப்பிய மகா யுத்தத்தில் “எம்டன்” என்னும் கப்பல் சென்னையைத் தாக்கிய போது, இந்த கிளைவ் பாட்டிரியிலிருந்து ஆடவரும் பெண்களும், குழந்தைகளும் அக்கம் பக்கலிலிருந்து வந்த குண்டுகள் தங்கள் மேல் படாதபடி, உள்ளே ஒளிந்திருக்க மிகவும் உபயோகப் பட்டதாகக் கேள்விப் பட்டேன். ஏறக்குறைய நூற்றெண்பது வருடங்களுக்கு முன் சென்னையில் கவர்னராயிருந்த லார்ட் க்ளைவ் என்பவர் தன் பெயரால் சென்னையில் கட்டப்பட்ட ஒரு “பாட்டரி”யானது தற்காலம் மேற்கண்டபடி உபயோகப் படுகிறதென்று தம் சூட்சும தேகத்தோடு கேள்விப் பட்டால், உடல் சிலிர்ப்பார் என்றே நினைக்கிறேன்.

அப்படியே கடற்கரையோரமாகவே இன்னும் வடக்கே நோக்கிப் போவீர்களானால், சென்னை கஸ்டம் ஹவுஸுக்கு எதிராக, ஒரு கட்டிடத்தைக் காண்பீர்கள். அதன் எட்டு வாயில்களிலும் “”கார்ன் வாலிஸ்” என்று பெரிய எழுத்துகளால் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். லார்ட் கார்ன் வாலிஸ் என்பவர் இந்தியாவில் பல வருஷங்களுக்கு முன் கவர்னராக இருந்த சீமான். ஆகவே இக்கட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/10&oldid=1352264" இலிருந்து மீள்விக்கப்பட்டது