பக்கம்:Humorous Essays.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

5

டத்திற்குள்ளாக அவரது சிலை உருவம், அவருடைய ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் எண்ணலாம். ஆயினும் இந்த எட்டு வாயில்களுக்குள் ஏதாவது ஒன்றின் வழியாக நீங்கள் உள்ளே சென்று பார்ப்பீர்களானால் கார்ன் வாலிஸ் சிலை உருவம் ஒன்றையும் காண மாட்டீர்கள்! அதற்குப் பதிலாகத் தண்ணீர் தொட்டி மாதிரி ஒன்று இக்கட்டிடத்தின் நடுவில் கட்டியிருப்பதையே காண்பீர்கள். அதிலும் தண்ணீர் கிடையாது! பிறகு நான் விசாரித்ததில், லார்ட் கார்ன் வாலிஸின் சிலை சென்னை மியூஸியத்தில் வைக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். ஒருவருடைய சிலையை ஒரிடத்திலும், வைக்க வேண்டிய கட்டிடத்தை வேறொரு இடத்திலும் வைக்கும் விந்தையானது நமது சென்னை நகருக்குத்தான் உரித்தானது.

சென்னையில் உள்ள ஒரு ‘பார்க்’ நீங்கள் கவனிக்கத் தக்கது. ‘பார்க்’ என்றால் பெரிய தோட்டம் என்று அர்த்தமாகும். அதிலும் சாதாரணமாகக் கல்கத்தா, பம்பாய் முதலிய இடங்களிலுள்ள பார்க்குகள் மைல் கணக்கான விஸ்தீரணமுடையவை. அவற்றில் அழகிய புஷ்பச் செடிகளும், ஆகாயத்தை அளாவிய மரங்களும் நிறைந்திருக்கும். அன்றியும், சாதாரண ஜனங்கள் கண்டு களிப்பதற்காகக் காட்டு மிருகக் கூண்டுகளும், பட்சிக் கூடுகளும், நம் நாட்டிலில்லாத பாம்பு முதலியவைகளும் கூடுகளில் அடைக்கப் பட்டிருக்கும். அன்றியும், படகுகளில் ஜனங்கள் போகும் படியான நீர் நிலைகளும் அமைக்கப் பட்டிருக்கும். சென்னையில் பீபில்ஸ் பார்க்கை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். நிற்க:-

முதலில் கூறிய பார்க் எங்கே இருக்கிறதெனப் பெரும்பாலருக்குத் தெரியவே தெரியாது. இதைப் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு பூதக் கண்ணாடியையெடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். திருவல்லிக்கேணியில் இது இருக்கிறது. இதன் பெயர் “கான்பகதூர் ஹாஜி ஹகீம் முகம்மது அப்துல் அஜீஸ் சாகிப் பார்க்”. மற்றப் பார்க்குகளெல்லாம் நான்கு அல்லது ஐந்து மைல் விஸ்தீரண மிருந்தால், இது நான்கு அல்லது ஐந்து அடி விஸ்தீரண முடையதாயிருக்கிறது. மற்ற விநோதப் பார்க்குகளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/11&oldid=1352400" இலிருந்து மீள்விக்கப்பட்டது