பக்கம்:Humorous Essays.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

ஹாஸ்ய வியாசங்கள்

அவனுக்கு மனம் வரவில்லை. உடனே உள்ளே போய் தனக்கு பரிச்சயமான ஒருவரிடமிருந்த அங்கவஸ்திரத்தை வாங்கித் தலையில் சுற்றிக் கொண்டான். தன் பழய தலைகுட்டையை சாயங்காலம் வரையில் எங்கே வைத்திருப்பது என்பது அவனுக்குக் கவலை தந்தது. வெளியில் எங்கேயாவது மாட்டி வைத்தால் யாராவது களவு செய்து கொண்டு போய் விட்டால் என்ன செய்வது என்பது பெரிய கவலை; அதன் பேரில் ஆஸ்பத்திரி முழுவதும் சுற்றிப் பார்த்து, ஓரிடத்தில் அதை பத்திரமாய் ஒருவருமறியாதபடி மறைத்து வைத்தான். அது எந்த விடமென்று இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குப் பிறகு தெரிய வரும்.

பிறகு கொஞ்ச நாழிகைக்கெல்லாம் சென்னையிலிருந்து வந்த வைத்தியர் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார். அவர் ‘முக்கியமாக நாம் குடிக்கும தண்ணீரிலும், உட்கொள்ளும ஆகாரத்திலும் சுத்தமாயிருக்க வேண்டும், அப்படியிருந்தால் நம்மைப் பீடிக்கும் வியாதிகளில் நூற்றுக்கு எண்பது பங்கு நம் அருகில் வர மாட்டா’ என்னும் கோட்பாடுடையவர். இதைப் பற்றி அநேகப் பிரசங்கங்களும் செய்தவர், புஸ்தகங்களையும் எழுதியவர். அப்படிப்பட்டவர் ஆஸ்த்திரியில் எல்லாம் சுத்தமாயிருக்கிறதா என்று மேல்பார்வை பார்த்துக் கொண்டு வரும் போது, மற்றெல்லாம் மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது என்று நமது ஜில்லா வயித்தியரைப் புகழ்ந்து விட்டு, ஆஸ்பத்திரிவாசிகள் குடிப்பதற்காக வைக்கப் பட்டிருக்கும் தீர்த்தத்தைப் பரிசுத்தம் செய்யும் ஃபில்டர்களைப் (Filters) பரிசோதித்துக் கொண்டு வந்தார். அதில் ஒன்றின் குழாயைத் திருப்பிய பொழுது தண்ணீர் வேகமாக வரவில்லை. என்ன காரணம் என்று கண்டறிய வேண்டி, அதன் மேல் மூடியைத் திறக்க, கருப்பாக ஒரு வஸ்து காணப்பட்டது. கொஞ்சம் சாலேஸ்வரமுடைய அவர், விரலினால் அது இன்னதென்றறிய வேண்டி இழுக்க, கருப்புத் துணியின் முனை ஒன்று அவர் கையிலகப்பட்டது. அதனை மெல்லப் பிடித்து இழுக்க, ஒரு பெரிய தலைகுட்டை ஒரு நாகத்தின் வால் போல் அதனின்றும் வெளி வந்தது. பக்கத்திலிருந்தவர்களெல்லாம் அப்படியே பிரமித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/24&oldid=1352408" இலிருந்து மீள்விக்கப்பட்டது