பக்கம்:Mixture.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் 25 அத்திமிங்கலத்தின் உடலின் மீது ஏதோ வெட்டுகிற சப்தம் கேட் டது. உடனே நான் கண்விழித்துப் பார்க்க, அச்சப்தம் அதிகரித்து ಎ7 வா என் அருகில் வருவது போல் தோன்றியது. கொஞ்ச நேரத்திற் கெல்லாம் என் தலைக்கு கோக ஒரு புகைக் கூண்டில் மேலே வெளிச்சம் தெரிவது போல் ஒரு வெளிச்சம் தோன்றியது. அன்றியும் ஏதோ மனிதர்கள் பேசுவது போல் சப்தமும் கேட்க ஆரம்பித்தது. நான் உலகத்திலுள்ள எல்லா பாஷைகளையும் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதை உங்களுக்கெல்லாம் முன்பே தெரிவித்திருக்கிறேனே, அதனுல் அவர்கள் பேசுவது லாப்லாண்ட் (Lapland): பாஷை என்பதை அறிந்தேன். உடனே நான் என். முழுபலத்துடன் அவர்கள். பாஷையில் நான் உள்ளே யிருப்பதைத் தெரிவித்தேன். அவர்கள் என் குரலேக் கேட்டதும் ஏதோ திமிங் கலத்தின் வயிற்றிலிருந்து ஒரு பிசாசு பேசுவதாக லினேத்தார் களம், இதைப் பிறகு அறிந்தேன். மறுபடியும் நான் இன்னுனெனத் தெரிவிக்க, அப்பயம் ரீ ங்கினவர்களாய், அத்திமிங்கலத்தின் முது கைப் பிளந்து வழி செய்து கொண்டு, மேலே யிருந்து ஒரு கயி ற்றைவிட, அதை நான் பற்றிக்கொண்டு மேலே போய்ச் சேர்ந்தேன். அப்பொழுது மிகவும் ஆச்சரியகாமாய் அவர்கள், நான் அத் தேசத்தில் யார் விட்டில் போய் இறங்க விருந்தேனே, அவர் களே என்பதைக் கண்டு சந்தோஷித்தேன். அவர்களும் மிகவும் சக் தோஷித்தனர். பிறகு அவர்களுக்கு என்னுடைய விர்த்தாந்தத்தை யெல்லாம் சொன்னேன். அவர்களும் அத்திமிங்கலத்தைத் தாங்கள் ஹார்ப்பூன் (Harpoon) என்னும் சட்டியாற் குத்தி கரைக்கு இழுத் துக் கொண்டு வந்து, அதைக் கொன்று, அதன் பிளப்பர் (Blubber) என்னும் கொழுப்பிற்காக அதை வெட்டிப் பிளந்த கதையைத் தெரிவித்தனர். இதில் இன்னுெரு ஆச்சரியகரமான விஷயம். என்னவென்றல், அதன் உடலை எல்லாம் பிளந்து கொழுப்பை எடுத்த பொழுது, அதன் வயிற்றில் கான் இருக்க கப்பலானது இவர்களுடையதெனக் கண்டறிந்தேன். ஒரு வாக்கிற்கு முன்பாக திமிங்கல வேட்டைக்காக அவ்ர்கள் அப்படகில் ஏறிச்சென் ற பொழுது, அத்திமிங்கலம் அப்படகைத்தன் வாலினல் அடித்துக் கவிழ்த்துவிட்டதாம். உடனே அவர்களெல்லாம் நீந்தித் தப்பித் 生

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/32&oldid=727325" இலிருந்து மீள்விக்கப்பட்டது