பக்கம்:Mixture.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கால நாடக சபைகளே அபிவிர்த்தி செய்வதெப்படி 47 கேட்டிருக்கிறேன். இதில் இன்னெரு விசேஷம் என்னவென்முல், தமிழ் நாடகமாயிருந்த போதிலும் காட்சி ஆரம்பப் பாட்டுகளும் முடிவு பாட்டுகளும், எந்த பாஷையிலிருந்தாலும் பெரிதல்ல என்று எண்ணப்படுகிறது! தெலுங்கு, கன்னடம், ஹிந்துஸ்தானி, பாட்டு களெல்லாம் பாடுவதற்கு இவைகள்தான் ஏற்ற சந்தர்ப்பங்களாக எண்ணப்படுகின்றன. டக த் தி ற் கும் இப்பாட்டுகளுக்கும் என்னடா சம்பந்தம் என்று கேட்பார் கிடையாது பெரும்பாலும்! இவ்வாறு ஆக்டர்களே காங்களாக சக்கர்ப்பங்களில்லாத பாட்டு களைப் பாடுவதன்றி, சபையோர்கள் காட்சியின் ஆரம்பத்திலோ, முடிவிலோ, நடுவிலோ, முக்கிய ஆக்டர்களைத் தாங்கள் விரும்பும் பாட்டுகளைப் பாடும்படி கேட்பது சாதாரணமாகி விட்டது பாதுகா பட்டாபிஷேகத்தில், பூநீராமர் சீதையையும் லட்சுமணரையும் அழைத்துக்கொண்டு காட்டிற்குப் போகிற காட்சியாயிருக்கும், அதில் சபையோர் நீராமர் வேடம் பூண்ட ஆக்டரை “பூமாத்தும்” என்னும் ராமலிங்க சுவாமிகள் பாட்டைப் பாடும்படி கேட்பார்கள். சன்யாசிவேடம் பூண்ட ஆடவனே.ஸ்தியோ, ஏதாவது பதம்பாடும் படி கேட்கப்படுவார் ; லட்சுமணனுக்கு இந்துஸ்தானி என்ருய்ப் பாடத் தெரிந்தால், அகில் ஒரு டப்பா பாடும்படி ஆக்ஞாபிக்கப்படு வார். இந்த ஆக்டர்களெல்லாம் இவற்றைப்பாடித் தொலைக்கவேண் டும். சிலகாலமாக தேசியப்பாட்டுகளை கொஞ்சமேனும் சந்தர்ப்பமில் லாத இடங்களிலெல்லாம் பாடும்படி சபையார் கேட்கத் தலைபட் டிருக்கின்றனர் என்பது நாடகாபிமானிகள் யாவரும் அறிந்த விஷயமே; காந்திப்பாட்டு மோதிலால் நேருப்பாட்டு: 'சர்க்கா பாட்டு முதலியன, அரிச்சந்திரன், நளன், ரீராமர், ராவ ணன் முதலியோர் பாடியாகவேண்டும்! அத் தேசிய -- பாட்டுகளுக் காக நான் ஆட்சேபிக்கவில்லை, அவைகளைப் படுவதற்காக தேசிய நாடகங்களை எழுதி, அவற்றுள் சந்தர்பத்திற்கேற்றபடி அவைகளைப் பாடினுல் மிகவும் ஒழுங்காயி ருக்கு மென்பது என்அபிப்பிராயம். கொஞ்சமேலும் சந்தர்ப்பமில்லாத இடங்களில் அவற்றைப் பாடுவ தற்குத்தான் நான் ஆட்சேபிக்கிறேன். சரியான சந்தர்ப்பங்களில் கூட, பாட்டுப் பாடும் விஷயத்தில் நாடக கம்பெனிகளில் நாம் கண்டிக்க வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/54&oldid=727349" இலிருந்து மீள்விக்கப்பட்டது