பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 39 ஒத்திகை ஆரம்பித்து விட்டோம். இதை இவ்விடம் என் எழு துகிறேன் என்ருல், தற்கால்த்தில் நாடகங்களெல்லாம் அச்சிடப். பட்டு, ஒவ்வொருவனுக்கும். ஒரு புஸ்தகம் தொடுக்கப்பட்ட போதிலும் நாடக தினம் வரையில் பாடம் படிக்காதவர்கள் வெகு பெயர்கள் இருக்கின்றனர். அக்காலத்திலோ பென்சிலினுல் எழுதப்பட்ட ஒரு காபியை வைத்துக்கொண்டு அத்தனை பெய ரும் அவரவர் பாகங்களை அவரவர்களாக எழுதிக்கொண்டு குருட்டுப் பாடம் செய்து ஒரு ఇ ఉత్య్రము ஒத்திகை ஆரம்பித்து விட்டோம் என்பதைக் குறிக்கவே. அக்காலத்தில் எங்களுக்கிருந்த ஊக்கம் தற்காலத்தில் வெகுவாய் இல்லை யென்றே கர்ன் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. - இன்னெரு விஷயம், இங்கு குறிக்கவிரும்புகிறேன். அக் காலங் தொடங்கி இக்க நாற்பது வருஷங்களாக எனது நாடங்களையெல்லாம் பென்சிலேக் கொண்டே எழுதி வருகிறேன். இது நான் கைவிடக் கூட வழக்கம: கி விட்டது. இதற்கு முக்கியமான காரணம் நான் எழுத உட்காரு முன் எழுத வேண் டிய வசனத்தை மனனம்பண்ணி, சித்தஞ்செய்து கொண்டே பிறகு உட்கார்ந்து எழுத ஆரம்பிப்பேன். அப்படி மனனஞ் செய்தது எழுதி முடித்து விட்டால், மறுபடி எழுத்து அதற்கு மேல் எழுதவேண்டிய வாசகங்களே மனனம் செய்ய உலாவு வேன். இதனுல் எழுத ஆரம்பிக்கும்பொழுது என் கை கடை யின்றித்தாராளமாகப்போகும். இதற்குப் பென்சிலினுல் எழுது வதே அதுகுணமாயிருந்தது. அடிக்கடி பேணுவைக்கொண்டு மைக் கூட்டில் தோய்த்து எழுது எது எனக்குத் தடையாயிருந் தது; அக்காலத்தில் பெள ண்டன் பென் என்பது கிடையாது. பிறகு பெளண்டன் பென் சென்னேயில் வாடிக்கைக்கு வந்த போதிலும், என் பழய வழக்க மானது கன்ரு ய் வேர் ஊன்றிய என் மனத்தை, மாற்றமுடியாமற் போய் விட்டது. இப்பொழு தும் இந்த நாடக மேடை கினேவுகளைப் பென்சிலினுலேயே எழு துகிறேன். இந்த சுதேசமித்திரன்' பத்திரிகையின் போர்பன (Foreman) இப்படி பென் சிலிகுல் நீங்கள் எழுதுவதைப் படிப் பது கஷ்டமாயிருக்கிறது கொஞ்சம் இங்கியினுல் எழுதி விடுங் கள் என்ற வற்புறுத்தியும் அவர் வேண்டுகோளுக்கிசைய அசக் தஞ யிருக்கிறேன், பழக்கம் பொல்லாத பாறை மேற் கோழி சீர்க்கு ' என்னும் பழமொழி என் மனதிற்கு ஞாபகம் வருகி றது. என் செய்வது? நம்மில் பெரும் பாலர் வேறெதற்கும் அடி மைகளாக விட்டாலும் இந்தப் பழக்கம் என்பதற்கு எளிதில் அடிமைகளாகிவிடுகிருேம், அந்த அடிமைத் தனத்தினின்றும் மைவிடுத்துக் கொள்ள அசக்தர்களாகி யிருக்கிறுேம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/44&oldid=727454" இலிருந்து மீள்விக்கப்பட்டது