பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நாடகமேடை நினைவுகள் சபை அங்கத்தினர் ஒருவரை நாம் வலித்துக் கொண்டால் அவர் களுக்குமிருக்கும் என்னும் யோசனை எனக்குக் கொஞ்சமாவது இல்லாமற் போயிற்று! கிருஷ்ணசாமி ஐயருடைய பாடல் என் மனதைக் கவர்ந்த போதிலும் அவர் ஆண் வேடம் பூண்டு நடித் தது எனக்கு அவ்வளவு திர்ப்தி காமாயில்லை. இவருக்கு இவர் குரலுக்கேற்றபடி, ஸ்கிரீ வேடம் தான் தகுந்தது என்று என் மனதுக்குள் தீர்மானித்தேன். ஒத்திகை முடிந்து வீட்டிற்கு வந்த மறுநாள், என் நண்பராகிய மேற்கொன்ன தியாகராஜ முதலியார் மூலமாக, கிருஷ்ணசாமி ஐயரைப் பற்றிய சமாசாங் களெல்லாம் தெரிந்து கொண்டு, மறு ஞாயிற்றுக்கிழமை எங்கள் சபை ஒத்திகைக்கு அவரை அழைத்து வாச்செய்து, கிருஷ்ணசாமி ஐயருடன் கலந்து பேசி, மெல்ல அவரை எங்கள் சபை அங்கத்தினாாகச் சேரும்படி யுக்தி செய்தேன். சில தினங் கள் பொறுத்து அவரும் இசைக்க அப்படியே எங்கள் சபை யைச் சேர்த்தார். அச்சமயம் நாங்கள் மேற்குறித்த லீலாவதிசுலோசன நாடகத்தின் ஒத்திகையை நடத்திக் கொண்டிருந் தோம். மற்றப் பெரிய நாடக பாத்திரங்களெல்லாம் த்றவர் களுக்கு முன்பே கொடுத்தாய்விட்டபடியால், மிகுதியாயிருக்க ஒரு. சிறு காடக பாத்திரமாகிய காந்திமதி யென்னும் பாகத்தை இவருக்குக் கொடுத்தேன். அவரும் சிறுபாகமாயிருக்கிற தென்று ஆட்சேபனை செய்யாமல் ஒப்புக்கொண்டு, அந்தப் பாகத்தை எழுகிக்கொண்டு, உடனே எங்களுடன் சேர்ந்து ஒத்திகை நடத்தி வர் கார். இதில் இவருக்கு இரண்டு பாட்டு களுக்குத்தான் இடமிருந்தது. அந்த இரண்டு பாட்டுகளையும் சுரு சுருப்புடன் கற்ற மிகவும் என்ருய் ஒத்திகைகளில் பாடிக் கொண்டிருந்தார். இவ்விடம் என் பழைய நண்பராகிய இவரிடம் அப்பொழுதே இ ரு ங் த ஒரு பெரும் கற்குணத்தை நான் எழுத வேண்டியது அதி அவசியம் முதலில் மற்ருெரு சபையில் கதாநாயகனுக வேடம் கரித்திருக்க போதிலும் எங்கள் சபை யைச் சார்ந்த பொழுது ஒரு சிறு நச டகபாத்திரத்தை நடிக்க ஒப்புக் கொண்டார்! தற்காலத்தில் நாடக மேடையில் பயிற்சி ஒன்று மில்லாதவர்கள் கூட, ஒரு சபையில் சேர்ந்தவுடன், கதா நாயகன் அல்லது கதாநாயகி வேடம் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்துகிருர்கள்! மேலும் இவர் நல்ல சாரீரத்துடன் சங்கீ தப்பயிற்சி என்ரு யடைந்தவரா யிருந்தபோதிலும் இரண்டே இரண்டு பாட்டுகளைக் கொடுத்த ப்ோகிலும், போதும் என்று ஒப்புக்கொண்டு அதை என்ருய்ப் பயின்று வக்கது, மெச்சத்தக் கது. தற்காலத்தில் இவரது சாரீரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாதவர்கள் கூட ஒரு ஸ்திரீ வேடம் கொடுத்தால், இவ்வ. ளவு பாட்டுதான, இன்னும் அதிகம் வேண்டும் என்று சச்சர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/91&oldid=727506" இலிருந்து மீள்விக்கப்பட்டது