பக்கம்:Saiva Nanneri.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 னசு, சீனிவாச ஐயங்கார், அனவரதவிநாயகம் பிள்ளே, சீனிவாசப் பிள்ளை, பழனியப்ப பிள்ளை ஆகியோரும் பிறரும் ஆவர். பிற்காலத்தெழுந்த தமிழ் நூல்களில் பெரும் பாலன 5ால்வர்க்கும் வணக்கம் கூறுகின்றன. அவ்வாறு கூறும் பொழுது நால்வர் பெயரையேனும் அல்லது அவர் கள் செய்த அற்புதங்களில் சிறந்த நான்கு அற்புதங்களே யேனும் குறிப்பிடுதல் பெரு வழக்கமாகக் காணப்படு கிறது. அவ்வாறு கூறும்பொழுது கூறும்வகையில் ஒரு பொதுமை காணப்படுதலே எளிதில் அறியலாம். அதாவது மணிவாசகரும் அவர்தம் திருச் செயலும் நான்காவதாகக் கூறப்படலாகும். இவர்கள் அனைவரும் இவ்வாறு ஒரு முகமாகக் கூறுவதற்கு ஏதேனும் ஒரு வரலாற்று அடிப் படை இருந்தேயாகல் வேண்டும். அவ்வடிப்படை எது வென இப்பொழுது துணிதற்கில்லே. மாயாவாதம் என்பது புறச் சமயங்களுள் ஒன்று. இதனைத் தோற்றுவித்தவர் சங்கரர். இதனைப் பிற்காலச் சைவ நாயன்மாரில் சிலரும், வைணவ ஆழ்வாரில் சிலரும் கண்டிக்கின்றனர். இத்தகைய மாயாவாதம் பற்றிய குறிப்பும் கண்டனமும் மாணிக்க வாசகரால் குறிக்கப்படு கின்றன. மிண்டிய மாயாவாத மென்னும் சண்டமாருதம் சுழித்தடித்தார்த்து.' எனவே மாணிக்க வாசகர் மாயவாதத்தைத் தோற்றுவித்த சங்கரர் காலத்திலோ அன்றி அவருக்குப் பிற்பட்ட காலத் திலோ தோன்றியிருத்தல் வேண்டும். ஒரு சமயம் மாற்ரு ரால் கண்டிக்கப்பட வேண்டுமானல் அது ஒர் அளவிற்கு வளர்ந்த பிறகே கண்டிக்கப்படும். எனவே சங்கர ரது மாயா வாதம் ஒர் அளவுக்குப் பரவிய பின்னரே மாணிக்க வாசகர் அதனேக் கண்டித்திருக்க வேண்டும். அவ்வா றெனில் சங்கரருக்குப்பிற்பட்ட காலத்தவரே மணிவாசகர் எனலாம். சங்கரர் காலத்தை ஆராய்ந்த மாக்ச்முல்லர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/114&oldid=729859" இலிருந்து மீள்விக்கப்பட்டது