பக்கம்:Saiva Nanneri.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 வாழ்ந்தான். அதல்ை தமிமுகம் முழுவதும் இவன் ஆட்சி குட்பட்டது. குடமலே நாடும், கங்கபாடியும், நுளம்ப ப்ாடியும், தடிகை பாடியும் இராச ராசனது புகழ் பாடின. இரட்டபாடி அவன் காலடியில் வீழ்ந்தது ; வேங்கி நாடு அவன் திருக்கண் பார்வைக்கு ஏங்கியது ; கலிங்கம் நடுங். கியது. ஈழமும் அவன் அடி பணிந்தது. இவ்வாறு போர் செய்வதிலேயே தன் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவிட்ட இப்பெருமன்னன் சைவ சமயத்தைத் தன் உயிரெனப் போற்றி அதன் வளர்ச்சிக்காகவும் பாடுபட் டான். என்றும் தன் பெருமையும் அருமையும் குன்ருது இராசராசனது பெயரினை இவ்வவனிக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் தஞ்சைப் பெரிய கோயிலேக் கட்டி அழி யாப் புகழ்பெற்ருன் இவன். இதன் காரணமாய் இவன் "சிவபாதி சேகரன் ” என்று போற்றப்பட்டான். இவனும் இவனது மனைவியாகிய உலகமாதேவியும் தானங்கள் பல செய்தன்ர். - ■ இவனது மகனே முதலாம் இராசேந்திரன் (10131044) ஆவான். இவன் தந்தையின் வழியைப் பின்பற் றிக் கங்கை வரை சென்று தமிழர்தம் பெருமையை கிலே நாட்டினன். இவ்வாறு கங்கை வரை சென்று வெற்றி பெற்ற இவன் அதன் நினைவாகக் கங்கை கொண்ட சோமு. புரத்தை நிறுவி, அங்குக் கங்கை கொண்ட சோழேச்சுரம் என்னும் திருக்கோயிலையும் அமைத்தான். இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயிலை ஒத்திருந்தது. இக்கோயிலேக் கருவூர்த்தேவர் தமது திருவிசைப்பாவில் பாடியுள்ளார். இன்று இவ்வூர் சிதைந்த கோலத்தில் சிற்றுாராய்க் காட்சி தருகிறது. இராசேந்திரனும், அவனது குடும்பப் பெண் களும் சிவநெறி போற்றிப் பலவகையில் கோயில் திருப் பனி செய்தனர். சோழர் பரம்பரையில் மிகச் சிறந்த அரசர்களாகக் கருதப்பட்டவருள் கடைசி அரசன் குலோத்துங்கன் (1070-1130) ஆவான். இவன் இராசேந் திரன் மகளாகிய அம்மங்கைக்கும் கீழைச் சாளுக்கிய மன் னன் இராசேந்திரனுக்கும் பிறந்தவன். இவனும் சிறக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/154&oldid=729903" இலிருந்து மீள்விக்கப்பட்டது