பக்கம்:Saiva Nanneri.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2? தலை ஏந்தி வழிபடுகிருள். புலவர் இவ்வாறு முரண்பட். வழிபாடுகளைக் காட்டுவதன் காரணம் முருகன் எல்லாம் கடந்த ஒரு கடவுள் என்பதைக் காட்டத்தான் என்ன லாம். இக்கருத்தினேயே பேராசிரியர் தெ. பொ. மீளுட்சி சுந்தரனர், “In these descriptions, the contradictions are resolved in the harmony of the Lord-an inevitable harmony of such contradictions, as to be welcomed and enjoyed-no morc abhorred or feared ” என்று சுட்டிக்காட்டுகின்ருர். . அடுத்துத் திருச்சீரலைவாய்க் காட்சி. முருகன் கால் கிளர்ந்தன்ன வேகத்துடன் வரும் வேழத்தின் மீது வருகி ருன். தலையிலே பலவித மணிகள் பதிக்கப்பட்ட முடியு டன், பன்னிரு கரங்களுடன், ஆறு முகங்களுடன் அவன் காட்சி தருகின்ருன். ஆறு முகங்களும் மக்கள் வாழ்வில் மேற்கொள்ளும் அறுவகைப்பட்ட முயற்சிகளைக் குறிக் திடும். முகத்திற்கு இரண்டு கைகள் வீதமுள்ள பன்னி ரண்டு கைகளும் அந்த அறுவகை முயற்சிகளையும் நி,ை1) வேற்ற உதவும் கருவிகளாகக் கொள்ளலாம். இறைவன் உலக வேற்றுமைகளைக் கடந்த ஒரு பரம் பொருள்: அவன் ஒரு கடல். கடலிற் பல்வேறு நிறமும் சுவையும் உடைய நீர் கலக்கலாம். என்ருலும் இறுதியிலே அவற்றின் வேம் றுமை மறைந்து கடல் ரோதல் உண்டு. அது போல வேறு வேறு நிறமுள்ள மணிகள் இறைவன் திருமுடியிலே ஒன்று படுகின்றன. இவ்வாறே இறைவன் ஒருமையின் உறைவிட மாக, ஒற்றுமையின் இருப்பிடமாக விளங்குகிருன் என் னலாம். “His crown is a harmony of all the geometrical shapes. The various activities or phases of the world are but his varied faces. He is like a diamond with six facets.” -Prof. T. P. Meenakshisundaram,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/36&oldid=729958" இலிருந்து மீள்விக்கப்பட்டது