பக்கம்:Saiva Nanneri.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. தமிழிலக்கிய வரலாற்றில் மட்டுமன்று: தமிழ் மக்களின் ஆன்மீக வாழ்விலேயே ஏற்பட்டு விட்டது: தமிழ் மக் களின் வாழ்க்கையின் அடிப்படையினேயே மாற்றிய பெருமை ஞானசம்பந்தருக்குண்டு. ஞானசம்பந்தருக்கு முன்னல் சங்க காலத்திலோ, அதற்கடுத்த காலங்களிலோ வாழ்ந்த மக்களுக்குச் சமயவுணர்வு மிக்கிருந்தது என்று துணிதற்குச் சான்றுகள் இல்லை. அதுவும் சங்க காலத் திலே சமயத்தைப்பற்றித் தமிழ் மக்கள் கவலையே கொண் டதில்லை. அதனை அக்காலத்திலே சமயப் பாக்கள் மிக மிக அருகியிருந்தமை ஒன்றே உறுதிப்படுத்தும். இவ் வாறு சமயத்தைப் பற்றிக் கவலையே கொள்ளாமல் வாழ்ந்து வந்த தமிழ் மக்களைத் தம் இசை குழைந்த இனிய தமிழ்ப் பாக்களால் தட்டி எழுப்பிச் சமயவுணர்வினே ஊட்டிக் கடவுட்கனலே உளத்தில் மூட்டி அவர்களேத் தத்துவ ஞானம் பெறச் செய்து நாளும் இறைவனேப் பரவிம் பரவிப் பக்தி வெள்ளத்தில் மூழ்கச் செய்த பெருமை சம்பந்தரையே சாரும். சமணம், புத்தம் ஆகிய புறச்சமயங்களைப் போலச் சைவத்தையும் ஒர் அமைப் LjøLu floutors (Ordered Religious Sect). Fruit-Gov நடமாடச் செய்தவர் ஞானசம்பந்தரே யாவார். * சைவ மணமும் தெய்வ கலமும் இசை யழகும் தமிழ் வளமும் கொழிக்கும் இவர்தம் பல்லர்யிரக்கணக்கான பாடல்கள் வடக்கே காளத்தி முதல் தெற்கே நெல்லே வரை பரவின. நாடெங்கும் பக்தி வேகம் காட்டுத் திப்போலப் பரவியது: சைவமாரி பொழிந்தது. சிவப்பம் றுப் பெருக்கெடுத்தோடியது. தமிழ் மக்கள் “ஞாலம் மிக்க தண்டமிழால் ஞானசம்பந்தன் சொன்ன கோலம் மிக்க மாலை"யின் மண்ம் நுகர்ந்து உளங்குளிர்ந்தனர். அதனால் அவர்களுக்குச் சமயப்பற்று மிகுதியாக உண்டா கியது. புறச் சமயங்கள் கதிர் கண்ட பனித் துளியாயின. நாடெங்கும் சிவனுக்குக் கோயில்கள் எழுந்தன: பழைய கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன. கோயில்களிலே நாடோறும் "காழிநாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/82&oldid=730009" இலிருந்து மீள்விக்கப்பட்டது