பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கல்லாத்துக்குடி :-சென்னை ராஜகானி, த ஞ் சா ஆர் ஜில்லா, மாயூரக்கோலுக் கருகிலுள்ள சிவாலயம். கல்லான்றுர் -சென்னை ராஜதானி, விழுப்புரத்திற்கு 8 மைல். சிவாலயம்-ஸ்வாமி சுவர்ணபுரீசர், தேவி திரு வழகி. வைப்புஸ்தலம். கல்லகொண்டா :-நெல்லூர் ஜில்லா, சென்னே ராஜ தானி, குகைக்கோயில். ஸ்வாமி கண்டி மல்லேஸ்வரர். கார்த்திகை சிவராத்ரி பூஜை, மற்றகாலம் பூஜை இல்லை. இவ்வாலயம் திருவாதுறை ஆதீன மேற்பார்வையுடையது. கல்லூர் :-(திரு) தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜ தானி, சுந்தரப்பெருமாள் கோயிலுக்கு 2 மைல் தெற்கு, சிவாலயம் மாடக்கோயில், ஸ்வாமி பெரியாண்டேஸ்வரர், தேவி திரிபுரசுந்தரியம்மை, ஸ்தலவிருட்சம்-வில்வம், வசு தேவர், பூரீ கிருஷ்ணன், பாண்டவர்கள் பூசித்த ஸ்தலம். சிவபெருமான் அப்பருக்குத் தி ரு வ டி சூட்டியருளிய கேடித்திரம். அமர்நீதி நாயனர் முத்திபெற்ற ஸ்தலம். பிரம்மோற்சவம் மாசிமாதம். இங்கு பாபநாசம் ஸ்டேஷ ணுக்கு அருகில் 3 மைல் தூரத்தில் கலியான சுக்தரேஸ்வரர் கோயில் உளது. செயற்கையாலாகிய சிறு குன்றின் மீதுளது இதற்கு சுந்தரகிரி என்று பெயர். இங்கு அகஸ்தியருக்கு பரமசிவன் கலியாணக்கோலம் காட்டியதாக ஐ தீ கம். கோயிலுக்கு எதிரிலுள்ள குளத்தில் குந்திதேவி ஸ்நானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. குளக்கரையில் இது சித் திரிக்கப்பட்டிருக்கிறது. மூலஸ்தானத்தில் இரண்டு லிங் கங்கள் உள ஒரே அவடையாரில். மூலஸ்தானலிங்கம் மெருகிட்டதுபோல் பளபளப்பாயுளது. இது தினம் ஐந்து முறை நிறம் மாறுவதாக ஐதீகம். கர்ப்பக் கிரஹத்தின் மேற்குபுறம் சிவ பார்வதி உருவங்களும், வடக்கில் விஷ்ணு வின் உருவமும், தெற்கில் பிரம்ம்ா உருவமும் இருக்கிறது. இவ்வூருக்குப் பழைய பெயர் பஞ்சவன மஹாதேவி சதுர் வேதி மங்கலம். இங்கு நடராஜமூர்த்தி சதுர நடமாடும் திருக்கோலமுடையது. பல கல்வெட்டுகள் உள. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசுகள் பாடல்பெற்ற ஸ்தலம். கல்லூர் :-தென் ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜ தானி, விருத்தப்பிரயாகை என்றும் பெயர், இங்கு இரண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/52&oldid=730366" இலிருந்து மீள்விக்கப்பட்டது