பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஸ்வாமி - சத்யகிரீஸ்வரர், தேவி கோவர்த்கம்ைபிகை; குகைக்கோயில், கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் சுந்தர பாண்டிய ஈஸ்வர முடையார் என்றிருக்கிறது. மார வர்மன் பாண்டியல்ை 1216-ஞ் வெட்டப்பட்டதாயிருக்க வாம். மண்டபம் 19 x 17 x 9 அடி ; கர்ப்பக்கிரஹம் 8 அடி சதுரம். இங்குள்ள நடராஜர் சிலே அழிந்திருக் கிறது. மலையின் மீது ஒரு சுனே இருக்கிறது. அதன் பக்கம், சிவலிங்கம் நந்தி வெட்டப்பட்டிருக்கிறது - விஸ்வ நாதர் - விசாலாட்சி. இதற்குப் பூஜை செய்ய குருக்கள் ஜலத்தில் நீந்திக்கொண்டு போகவேண்டும். இங்குள்ள மீன்கள் பல வர்ணமுள்ளவை. பெரிய கோயிலின் முன் மண்டபத்திலுள்ள சுப்பிரமணியர் தெய்வயான திருமணக் கோலம் பார்க்கத் தக்கது; அழகிய சில்பம். இங்கு பல சத்திரங்கள் உண்டு. பரமதி:-திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னே ராஜ தானி, சிவாலயம் பழமையானது ; இதில் பல கல் வெட்டு தள் உள. பரமேஸ்வர மங்கலம் :-சென்னை ராஜதானி சிவாலயம். ஸ்வாமி.கைலாசநாதர், தேவி.செளக் தர நாயகி. குபேர தீர்த்தம், லக்ஷ்மி பூசித்த கேத்திரம். பராபர் மல்ே :-பாட்னு-கயா ரெயில்வேயிலுள்ள பேலா ஸ்டேஷனுக்கு 7 மைல் கிழக்கு. மலையின் உச்சியில் சிவாலயம் ; ஸ்வாமி-சித்தேஸ்வரர், லிங்கம் இரவில்தான் பூசிக்கப்படுகிறது. அகந்த சதுர்த்தி பூஜை விசேஷம். பராய்த் துறை :-(திரு) திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னை மாஜதானி; எழுமனூர் ஸ்டேஷனுக்கு 18 மைல், வட கிழக்கு. இந்திரன், குபேரன், சப்த ரிஷிகள், பூசித்த ஸ்தலம். இவ்வூருக்கு அகண்டகாவேரி யெனவும் பெயர்.சிவா லயம், ஸ்வாமி-பராய்த்துறை நாதேஸ்வர், தேவி.பொன்மயி லாம்பிகை யம்மை ; காவிரி நதி, பராய் விருட்சம். மிகவும் பழைய கோயில். திருஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. இங்கு மற்ருெரு கோயில் தாருகாவனேஸ்வர் கோயில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/78&oldid=730394" இலிருந்து மீள்விக்கப்பட்டது