பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ஒரு ஆலயத்தில் சிவபெருமானும், கேசவப் பெருமாளும் ஒரே கோயிலில் எழுந்தருளியிருக்கின்றனர். இதற்கு புஷ்ப கிரி கோயில் என்று பெயர். பூதபாண்டி :-திருவாங்கூர் ராஜ்யம், பூதநாதர் கோயில் பழைய சிவாலயம், பல கல்வெட்டுகள் உள. பூதேசம் :-வட இந்தியா, கோஹத்தியின் சமீபம், சிவாலயம். ஸ்வாமி. பஸ்மகாயர் - உமாதேவி, சுயம்பு லிங்கம். பூதலூர் -சென்னை ராஜதானி, திருச்சிராப்பள்ளி ஜில்லா, ரெயில் ஸ்டேஷன், சிவாலயம். ஸ்வாமி - ஆபத் சகாயர், தேவி-ஆனந்தவல்லி. பூந்துருத்தி :-(திரு) காந்தர்வர் புஷ்பவனம் வைத்து பூசித்த ஸ்தலம். தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, திருக்கண்டியூருக்கு 1 மைல் மேற்கு, தஞ்சாவூரிலிறங்கிப் போகவேண்டும். திருஞானசம்பந்தரும், அப்பரும் இங்கு சிவ காலம் தங்கியிருந்த ஸ்தலம். அப்பர் இங்கு ஒரு மடம் கட்டுவித்தார். அந்த இடம் இப்பொழுதும் காட்டப் படுகிறது. சப்த ஸ்தானங்களில் 6-வது ஸ்தலம். ஸ்வாமி. புஷ்பவன நாதேஸ்வரர், தேவி-அழகாலமர்ந்த நாயகி. காசிகங்கை தீர்த்தம். கிழக்கு கோபுரம் 7 கிலே யுடையது. இரண்டாம் பிராகார கோபுரம் கிலமாயிருக்கிறது. கர்ப் பக்கிரஹத்தில் சில பழைய கல்வெட்டுகள் உள. இங்கு நந்தி சந்நிதிக்கு நேராக இல்லை. திருஞானசம்பந்தருக் காக சற்று விலகியதாக ஐதிகம். (சூர்யாபிஷேகத்திற்காக இவ்வாறு இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.) கோயிலில் சில பல்லவ சிம்ஹத் தூண்கள் இருக்கின்றன. அப்பர் பாடல் பெற்றது. - பூமாரு :-வட இந்தியா, சிவாலயம். ஆரும் நூற்ருண் டில் கட்டப்பட்ட தென்பர். பர் :-பூை ஜில்லா பம்பாய் ராஜதானி, குக்குடேஷ் வர் கோயில்; இங்குள்ள டிரமசிவம் தாண்டவமாடும் சிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/37&oldid=730428" இலிருந்து மீள்விக்கப்பட்டது