பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கிறது. கோயில் பீடம் நட்சத்திர வடிவமானது. தற்காலம் பெரிய கோயிலுக்குக் கிழக்கில் நஞ்சுண்டேஸ்வரர் கோயில் எனும் ஒரு புதிய மிகச்சிறிய சிவாலயமுளது. மேற்கில் சங்கரேஸ்வரர் கோயில் என்னும் ஒரு சிவாலயமுளது. ஹொய்சால சில்பம்.இங்கு அம்மன் சங்கிதியுண்டு. பேளுர் :-சேலம் ஜில்லா, சென்னை ராஜதானி, வசிஷ்ட நதிக்கரையிலுள்ளது. சிவாலயம்-ஸ்தல விருட் சமாகிய இலுப்பை மரத்தில் வித்துக்கள் இல்லை என்று கூறப்படுகிறது. பைஞ்ஞ்லி -(திரு) திருப்பங்கிலி எனவும் வழங்கப்படு கிறது. திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னை ராஜதானி. திருச்சிராப்பள்ளிக்கு 11 மைல் வடகிழக்கு. சிவாலயம், சோழ கட்டடம். சுவாமி-நீலகண்டேஸ்வர், மாற்றறிவா தர், தேவி-விசாலாட்சி, பாலசெளந்தரி; இங்கு இரண்டு அம்மன் கோயில்கள் உண்டு. ஒன்று கிழக்கு பார்த்தது மற்முென்று தெற்கு பார்த்தது. இக் கோயிலில் யமதர்ம ராஜனுக்கு பூமியின் கீழ்மட்டத்தில் ஓர் ஆலயமுண்டு. நவக்கிரஹங்களுக்குப் பதிலாக 9 விளக்குகள் வைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டாம் பிராகார்த்தில் வாழை மரங்கள் உள; இவை சபிக்கப்பட்ட தேவ கன்னிகைகள் என்பது ஐதிகம். இம் மரங்கள் தண்ணிர் வார்க்கப்படா மல் வளர்கின்றன என்று சொல்லப்படுகிறது. பசியினல் வருந்திய அப்பருக்கு சுவாமி கட்டமுது கொடுத்து அருளிய தோட்டமும், தடாகமும் இதற்கு மைல் அாரத்தில் இருக் கிறது. சுவாமிக்கு நிவேதனம் செய்த வாழைப்பழத்தைத் தின்னலாகாது, எறிந்துவிட வேண்டும் என்பது ஐதிகம். கோயிலின் சிலபாகம் பாண்டிய அரசர்களால் கட்டப் பட்டது. மூவர் பாடல் பெற்ற கேஷத்திரம். சிவபெரு மான் யமன எழுப்பிய ஸ்தலம். பைரங் :-வட இந்தியா, சிவாலயம். சுவாமி-பைரங் நாத், சுயம்புலிங்கம். - பொப்பூடி -நரசாங் பெட் தாலுகா, குண்டுர்ஜில்ல்ா, சென்னை ராஜதானி, சிவாலயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/50&oldid=730443" இலிருந்து மீள்விக்கப்பட்டது