பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பவானி :-பவானி முக்டடல் என்றும், கணு என்றும் வழங்கப்படுகிறது; சென்னை ராஜதானி, ஈரோட் ஸ்டேஷ அக்கு 83 மைல் வட மேற்கு. பவானியும், காவேரியும் சங்கமமாகுமிடத்தருகில் கோயிலுள்ளது. ப. ராச ர், குபேரன், விஸ்வாமித்திரர் பூசித்த கேத்திரம். ஸ்வாமி. சங்கமுக நாதேஸ்வரர், தேவி-வேதாம்பிகை. காவிரி, பவானி தீர்த்தம், இலங்தை மரம், லிங்கம் அமிர்தத்தாலாய தென்பது ஐதீகம். வடக்குக் கோபுரம் பெரியது; கோயி அக்குள ப்ோக இதன் வழியாகத்தான் போகவேண்டும் கிழக்கு வழியில்லை. (இக் கோயிலுக்குள் மஹாவிஷ்ணுவுக் கும் ஒரு கர்ப்பக்கிரஹ முண்டு; ஆதிகேசவப் பெருமாள்) இவ்வூரில் பத்ரகாளிகள் நான்கு பேர்கள் அசுரர்களைக் கொன்ற்காக ஐதீகம். இதற்கு தட்சிண காசி என்றும் பெயர், உத்தர்வாஹினி தட்சிண லிங்கம் உடையபடியால். கோயிலில் கேரோ என்னும் ஓர் ஆங்கில துரையால் ஸ்வாமிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தந்தக் கட்டில் பள்ளி யறையில் இருக்கிறது. தற்காலக் கோயில் சுமார் 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாக காண்கிறது. திரு ஞான சம்பந்தர் பாடல் பெற்றது. ஈரோட்டிலிருந்து பஸ் வசதி யுண்டு. இங்கு பெரிய முசாபர் பங்களா கோயிலுக் கருகில் உளது. பவானி முக்கூடல் என்றும் பெயர். மூன்ருவது ஆறு அந்தர் வாஹினியா யிருப்பதாக ஐதீகம், இதற்குப் பெயர் அமுத நதி. இத்தலத்தை தெரிசித்தவர்க்கு ஒரு தீங்கும் ஒண்ணு தாதலின் இதற்கு திரு கண்ணு அல்லது திரு கணு' என்று பெயராயிற் றென்பர். இதன் மற்றப் பெயர்கள் தட்சிண அளகை, தட்சிண பதரிகாசிரமம், திருவேனி சங்கமம், தட்சிணப் பிரயாகை, திரு முக்கூடல், திருவானி கூடல், தென் கயிலை, பராசர் கேத்திரம், வக்கிரபுரம் என்பன ՃԱք Ածց தேவியின் பெயர்கள்: வேதநாயகி, வேதவல்லி, பொன்னர் மெளலி, பண்ணுர் மொழியாள் என்பன ஒாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/6&oldid=730453" இலிருந்து மீள்விக்கப்பட்டது