பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தற்காலக்கோயில் 7-ஆம் நூற்றண்டிற்கு முற்பட்டதென எண்ண இடமுண்டு. திருஞானசம்பந்தர் பாடல்பெற்றது. மாத்தூர் :-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, திட்டைக்கு சமீபமுளது, சிவாலயம்; ஸ்வாமி ராமநாதேஸ் வரர், தேவி-திரிபுரசுந்தரி, தேவிக்கு மஹிஷாசுரமர்த்தனி என்றும் பெயர் உண்டு. வாயுதீர்த்தம்; வைப்பு ஸ்தலம். மாதங்கன்பள்ளி - பொன்னேரி தாலுகா சத்யவேடு கிராமத்திலுள்ளது. சென்னை ராஜதானி. இங்கு சிவால யம் ஒரு சமாதியின்மீது கட்டப்பட்டதென எண்ணப்படு கிறது. கோ யி லி ல் அபராஜிதன் எனும் கங்கபல்லவ அரசனது காலத்திய கல்வெட்டு ஒன்றுளது; இவர் 7-ஆம் நூற்ருண்டில் ஆண்டவர்; ஆகவே இக்கோயில் மிகவும் பழமையானதாம். மாதங்கன்பள்ளி என்பது மாதங்க ரிஷி யின் சமாதியாயிருக்கலாம் என்று சிலர் கினைக்கின்றனர். பள்ளி என்பது சாதாரணமாய் பூர்வகாலத்தில் ஜைன. ஆலயத்தைக் குறிக்கும்; ஆகவே இக்கோயில் பூர்வம் ஜைன ஆலயமாயிருந்ததென சிலர் கூறுகின்றனர். மாதர்ப்பாக்கம் :-தென் இந்தியா, சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி.விஸ்வேஸ்வரர், தேவி-விசாலாட்சி; கும்ப தீர்த்தம். மாத்தூர் -திருப்பத்தார் தாலுகா, ராமநாதபுரம் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி - அயோகிதீஸ்வரர், தேவி.அமிர்தவல்லி. மாதேஸ்வர மலே:-மஹாதேஸ்வரகிரி என்றும் வழங் கப்படுகிறது. கொள்ளேகால் தாலுகா, கோயமுத்த்ார் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். சிவராத்திரி விசேஷம். மாந்தாதா ;-வட இந்தியா, ஓங்காரேஷ்வர் கோயில், லிங்கம் ஜலத்தின் மத்தியிலிருக்கிறது; தேவிகோயில் பின்பக்கமுள்ளது. மாந்தாதா தீவின் மேற்கில் சிம்முக்தேஷ் வர் கோயில் உளது. இங்கு ஒருகைதான்யம் ஸ்வாமிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/76&oldid=730471" இலிருந்து மீள்விக்கப்பட்டது