பக்கம்:Siva Temple Architecture etc..pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

(இன்னும் இப்படி மாற்றப்பட்ட சில ஸ்தலங்களைப் பற்றி அறிய விரும்புவோர், எனதுமேற் குறித்த "சிவ ஆலயங்கள் - இந்தியாவிலும் அப்பாலும்" எனும் புஸ்தகத்தில் பார்த்துக் கொள்ளவும்.)

பிறமத ஆலயங்களாயிருந்து சிவாலயங்களாக
மாற்றப் பட்டவை

இனி மேற்கூறிய இரண்டாம் பிரிவாகிய, பொளத்த, ஜைன, வைஷ்ணவ ஆலயங்களா யிருந்தவை சிவாலயங்களாக மாற்றப் பட்டவைகளைப்பற்றி சிறிது கருதுவோம்.

(1) சென்னை ராஜதானியில் கிருஷ்ணா ஜில்லாவில், அநந்தபூர் தாலூகாவிலுள்ள "செஜர்லா" என்னும் ஊரிலுள்ள தற்கால சிவாலயம், ஆதியில் பௌத்த சைத்யமாயிருந்து பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டதாம்.

(2) கோதாவரி ஜில்லாவில், குண்டுபல்லெ எனும் இடத்திலுள்ள வட்டவடிவமான குகைக் கோயில் ஆதியில் புத்த ஆலயமாயிருந்தது, பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டது. புத்த தாதுகர்ப்பம் (தாகோபா) சிவலிங்கமாக மாற்றப்பட்ட தென்று டாக்டர் கசின்ஸ் கூறுகிறார்.

(3) மைசூர் ராஜ்யத்தில் பலஹொன்னூர் தாலுகாவில் 'களாசா' என்னும் இடத்தில் இருக்கும் சிவாலயம் ஆதியில் ஜைன கோயிலாயிருந்ததாம்.

(4) சென்னை ராஜதானி அநந்தபூர் ஜில்லாவிலுள்ள கம்படூரெனும் இடத்திலுள்ள சிவாலயமும், பூர்வம் ஜைன ஆலயமா யிருந்து பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டது.

(5) மைசூர் ராஜ்யத்தில் நந்தி துர்க்கம் என்னும் இடத்திலுள்ள சிவாலயம், சிலகாலம் ஜைன. ஆலயமாயிருந்ததென என்ணுவதற்கிட முண்டு அச்சமயம் இதற்கு நந்தகிரி என்று பெயர் இருந்ததாம்.

பூர்வம் விஷ்ணு ஆலயமாயிருந்து பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டதற்கு இரண்டொரு உதாரணங்களைக் கருதுவோம்.

(1) சென்னை ராஜாதானியில், திருநெல்வேலி ஜில்லாவில் குற்றாலத்திலிருக்கும். தற்கால சிவாலயம் ஆதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/43&oldid=1293968" இலிருந்து மீள்விக்கப்பட்டது