பக்கம்:Subramanya Shrines.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சுப்பிரமண்ய ஆலயங்கள் ருர், கோயில் திராவிட சில்பம், காயக்கர் காலத்தியது; குகைக்கோயில் பாகம் மிகவும் புராதனமானது, பல்ல வக் குகைக் கோயில்களைப் போன்றது. இக்கோயில் சில சமயங்களில் கோட்டையாக உபயோகிக்கப்பட்டி ருக்கிறது. நற்கீரர் திருமுருகாற்றுப் படையில் முதலா வதாகப் பாடியிருக்கிருர்-தீர்த்தம் சரவணப் பொய்கை, சைவ சமயாசாரியர்கள் இத்தலத்தை சிவாலயமாகப் பாடி யிருக்கிரு.ர்கள். பழமுதிர்சோலை :-மதுரைக்கு வடக்கு 12 மைல், தற்காலம் அழகர் கோயில் என்று வழங்கப்படுகிறது. கற்கீர ருடைய திருமுருகாற்றுப்படையில் ஆருவது படை வீடு, இங்கிருந்த சுப்பிரமண்ய ஆலயம் அழிக்கப்பட்டி ருக்கிறது. தீர்த்தத்தின் பழய பெயர் புண்ணிய சரவ ணம்.சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. பழனி-மதுரை ஜில்லா-திண்டுக்கல்தாலுரகா-ரெயில் ஸ்டே ஷன், குன்றத்தின்மீது பழனி ஆண்டவர் கோயில். மலே கடல் மட்டத்திற்கு 1066 அடி உயரம். குளத்திற்கு வையாபுரிக் குளம் என்று பெயர், மலைக்கோயில் சுமார் 9 ஆம் நூற்ருண்டில் கட்டப்பட்டதாக திருவா ளர் சோமசுந்தரம் பிள்ளே அவர்கள் கூறுகிருர் - கோயி வில் 8 கல்வெட்டுகள் உள. அவற்றுள் பூர்வீகமானது 13 ஆம் நூற்ருண்டில் ஆண்ட கோனேரின்மைகொண் டான் வீரபாண்டிய தேவனுடையதாகும். மைசூர் வீர நஞ்ச உடையார் காலத்திய கல்வெட்டொன்றுளது. கிருஷ்ணதேவராயர் காலத்தியகல்வெட்டும் ஒன்றுண்டு. மலே சுற்றுப் பிரகாரம் 14 மைல். மலேயடிவாரத்தில் பக்க விஞயகர் கோயில் இருக்கிறது. மலேமேல்போகும் வழியில் சேர வியைகர் கோயில்-அதற்கப்புறம் இடும் பன் கோயில். கோயிலில் மணிக்கட்டு மண்டபம், கவ ரங்கம் முதலிய பல மண்டபங்கள் உள. ராஜகோபுரம் 5 கிலே உடையது.42 தூண்சுள் கொண்ட மாரவேல் மண்டபம் பார்க்கத்தக்கது. இங்குள்ள சிவ சங்கிதிக்கு மலேக்கொழுந்து சிவம் என்றும், தேவிக்கு மலே காச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/16&oldid=731111" இலிருந்து மீள்விக்கப்பட்டது