பக்கம்:Tamil varalaru.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தமிழ் வரலாறு

மாகிய பொருள்களைத் தாழ்ந்த நிலையினும் வைத்துப் பாகு படுத்து வழங்குதற் குரிய பெயர் வேறுபாடுகள் ஒரு மொழியில் உளவாயின், அவை அந்நாட்டாரின் பகுத்துணர்வின் மேம்பாட்டிற்குச் சிறந்த அறி குறியாகும். இங்கனம் மனனுணர்வும், அதனை வெளிப்படுக்குஞ் சொல்வன்மையும் உண்மை கருதி மக்களே (உயர்திணை) உயர் குலமாகவும், மக்களல்லாத மனனுணர்வு குறைந்து சொல் வன்மையிலாத பிறவுயிர்களையும், உயிரில் பொருள்களையும் (அஃறிணை) தாழ்ந்த குலமாகவும் பாகுபாடு செய்வது அறிவு முதிர்ச்சியின் விளேவேயன்றி வேறன்று.

இச்சீரிய முயற்சியும், அதற்கேற்ற கருவிகளும், அவற்றை யியக்குதற்குரிய மனனுணர்வும் முற்றப்பெற்றவர் மக்களேயென் பது, திண்ணம். இம்மக்கட்குக் கிடைத்துள்ள எல்லா நன்மையினும் மனனுணர்வை வெளிப்படுக்கும் மொழிவன்மையே இறைவன் அருளிய பெரும்பேறாகும். 'வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் . . . . . தந்த தலைவன்’ என்று பெரியோர் பணிப்பர். இதன் கண் மனனுணர்வையும், சொல்வன்மையையும் தெய்வம் அருளிய பேருக நன்கு பாராட்டுதல் காணலாம். கம்பகா டரும்:

'இம்முதலைச் சொல்லுதற், கேன்றுருவமைந்தவும்' (கிட் கிந்தா காண்டம், காப்பு)

என்பதனால் மக்கட் பிறப்பின் சிறப்பினைச் சொல்வன்மை பற்றிப்பாராட்டினார். ஆதலால் உலகியற் பொருள்கள் தொடங் கித் தெய்வமீறாகவுள்ள எல்லாப் பொருள்களையும் அறிதற்கு மனனுணர்வு காரணமாயிருத்தல்போலவே, அவ்வறிவைப் புலப் படுத்திப் பெருக்குதற்குச் சொல்வன்மையும் இன்றியமையாத தென்பது இதனால் விளங்கும். சிறந்த உண்மைப்பொருள்களைத் தக்க சொற்களால் நன்கு விரிக்கவல்ல மொழிகளே உலகிற் பெருமையுற்று விளங்குவனவாம். ஆயினும் உலகத்தியங்கும் மொழிகள் யாவும் உயர் பொருளைச் சீரிய சொற்களாற் றெரிக்குந் திறத்தில் ஒரே தன்மையனவாகா. மக்களறிவின் சீர்மைக்கேற்ப மொழிகளும் பலதிறப்பட்டுக் கிடக்கின்றன. மக்கள் இவ்வுலகத்துத் தோன்றிய காண்முதற் புலமொழிகள் இவ்வாறு பிறந்து செழித்துத் தத்தம் காடுகட்குப் பெருமை யளித்து வந்திருத்தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/10&oldid=1228476" இலிருந்து மீள்விக்கப்பட்டது