பக்கம்:Tamil varalaru.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 த மி ழ் வ ர ல வ யங்கடவுண் முன்னர்க் கரணத்திற் (மந்திரச் சடங்கினல்) பல்லோர் அறிய நன்கு கிறைவேறவேண்டிய இன்றியமையாமை யுடைமையால், இதனே வேதம் உடன்பட்ட உலகியல் மணம் எனக்கொள்வர் நச்சிஞர்க்கினியர். அவர் களவியல் முதற் குத்திர வுரைக்கண் இது உலகியல் எனப்படும். உலகத்து மன்றலாவது குறவர் கொடுப்பதற்கு முன்னர் ஒருவற்கும் ஒருத்திக்கும் கண்ணு மனமுக் தம்முள் இயைவதேயேன வேதமுங் கூறிற்ருதலின் ’ என வி ள க் கி ச் செல்லுதலா அனுணரலாம். 'தந்தையானவன் தன் அபிப்பிராயத்தை விட்டுக் கன்னிகை விரும்பினவரனுக்கு அந்த வர ைல் விரும்பப்பட்ட கன்னிகையைக் கொடுக்கலாம். இதைத் தருமமான காந்தர்வ விவாகமென்று வேதமறிந்தோர் சொல்கின்றனர் ” (பாரத மொழிபெயர்ப்பு அதுசாசனப் பர்வம் ?9 அத்.) என்பதல்ை இவர் கூற்றின் உண்மை கன் குணரலாம். வது வார் மனமுங் கண்ணுமொத்தல் ஆபஸ்தம்பத்திற்கண்டது. இங்ங்னங் தலைவன் தலைவியர் கண்ணு மனமுந் தம்முள் ஒத்தபின்னர் வேட்கை தணியாது கின்று, கரணத்தோடு வரைந்து மெய்யுற்றுக் கூடு வதே தலையாயதென்றும், உள்ளப் புணர்ச்சிப் பின்னர் மெய்யுறு புணர்ச்சியுமெய்தி, அது வெளிப்படாமலே விரைந்து, கரணத் தொடு வரைவது இடையாயதென்றும், பாங்கற்கும் தோழிக்கும் வெளிப்பட்ட பின்னர்க் கரணத்தொடு வரைவது கடையாய தென்றும் கல்லாசிரியர் கருதுவர். இவ்வுண்மை களவியல் முதற் குத்திர வுரைக்கண் இளம்பூரண அடிகள், ஒரு கூட்டமும் கிகழாது ஆண்டு வந்து அடை வேட்கை யிருவர்க்குக் தனியாது கின்று வரைக்தெய்தலும் ஒன்று. இவ் வகையின்ை இக்களவொழுக்கம் மூவகைப்படும். ' என உரைத்த தல்ை உய்த்துணரப்படும். உள்ளப் புணர்ச்சி மட்டிலுடையதும், பிறரறியாத மெய்யுறு புணர்ச்சியுடையதும், பாங்கனுந் தோழியும் அறிந்த மெய்யுறு புணர்ச்சியுடையதும் என இக்களவொழுக்கம் மூன்ருதல் காண்க. பேயு மறியா மறையமை புணர்ச்சி ' (அகம். 62) என்பது. பிறர் யாருமறியாமற் புணர்தல் ஆதல் காண்க. நச்சிளுர்க்கினி யரும் ' களவு வெளிப்பட்ட பின்னராயினும், அது வெளிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/110&oldid=731260" இலிருந்து மீள்விக்கப்பட்டது