பக்கம்:Tamil varalaru.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழர் கொள் ைக க ள் I:25. கல்லா வன்பறழ் கிளே முதற் சேர்த்தி ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்' (குறுங். (9) என்னும் அருமைப் பாட்டான் உணரலாகும். ஆண்மக்கள் தம் மானங்காத்தும், பரலோகம் வேட்டும், பிராயோபவேச மேற் கொண்டு வடக்கிருத்தல், முறையே, 'புறப்புண் ணுணி வடக்கிருந் தோனே' (புறம். 66) எனவும், 'உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல் - முழுஉ வள்ளுர முணக்கு மள்ள' (ւլ (Dւհ. 219) (இது கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்தானேக் குறித்தது) என வும் வருவன கொண்டுணர்க. அரசர் இறக்கும்போது அவர்க்குப் பிராயச்சித்தம் (கழுவாய்) முதலியன வேதம் வவ் லாராகிய புரோகிதர் செய்தல் தொன்மை வழக்கு என்பது, - மன்னர் நோய்ப்பாள் விளிந்த யாக்கை தழிஇக் காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்பு ற் பரப்பினர் கிடப்பி மறங்கக் தாக நல்லமர் வீழ்ந்த நீள் கழன் மறவர் செல்வுழிச் செல்கென வாள்போழ்ங் தடக்கலு முய்ந்தனர்' (புறம். 93) என்ற அடிகளான் அறியலாம். இதன்ை விர சுவர்க்கம் உடன் படலுங் காண்க. போரிற் பொருதுவிழுப் புண்ணு னிறவாம லூரிற் பிணியா லுயிரிழத்தல்-தேரிறைவன் மாந்தர் குணஞ்செயலின் வைத்தபழ காற்பாலுள் வேந்தர் குடிக்கு விலக்கு” என்ற பாரத நீதியால் இப்பரிகாரம் இன்றியமையாமை யுணரப் படும். o : -- = - * -. - * - - ー。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/133&oldid=731285" இலிருந்து மீள்விக்கப்பட்டது