பக்கம்:Tamil varalaru.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ர யக் .ெக ா ள் ைக 147 இராசபுத்திரன் , இறைமகன்-இராசபுத்திரன் எ-று. சங்கர சோழனுலாவிற். 'கோமகன், வஞ்சிக்கு மோதை மகோதைக்கும் " என வந்தது. மணிமேகலையுட் கோமகன் என்பது சோழற்கும் (பாத்திரம் பெற்ற காதை. 48) புத்தருக்கும் (டிெ, 126) வழங் குதல் காணலாம். சோழனும் புத்தரும் இராச புத்திராதல் தெளிக. இறையென்பது வேந்தற்காதல், ஆரமர் கடக்கும் வேலு மவனிறை மாவள் எளிகைக் கோதையும் ” (புறம். 172) என் புழி அவன் வேந்தனகிய கோதையும் என வருதலானறிக. இதல்ை இறை மகன் என்பது வேந்தன் மகன் எனப் பொருள் படுதல் தெரியலாம். சேரன்,கோ எனப்படுதல் பதிற்றுப்பத்துள், போர்க்களத் தா டுங் Ga mGenu " (56) என்பது முதலாக வருதலான் அறிக. இதற்கிணங்கவே செங் குட்டுவன் திருத்தாய் கோமகள் எனப்படுதல் காண்க, இலங் கோவடிகள் சேரன் படை முதலியாகிய வில்லவன் கோதை வாயில் வைத்து, கங்கைப் பேர்யாற்றுக் கடும்புன னித்த மெங்கோ மகளை யாட்டிய வங்காள் ' எனக் காட்சிக் காதையிற் (160, 61) கூறினர். அரும்பதவுரை காரர் ஈண்டு எங்கோ மகள் ' என்றது. செங்குட்டுவன் மாதாவை, அவளே இவன் கொண்டு போய்த் தீர்த்த மாட்டின தொருகதை " என்றுரை கூறிக்காட்டினர். இம்மேற்கோளில் எங்கோ மகள் ' என்று சேரன் படைமுதலி வழங்கலான் அவன் குறிப்பொடு படுத்துப் பொருள் கொள்வதன்றி வேறு கூறல் பொருந்தாது. கோமகள் என்பது கோவிற்குப் புதல்வி எனவும் கோவிற்கு மனைவியாகிய கோ ப் .ெ ப ண் டு எனவும் பொருள்படும். கோவாகிய மகள் எனக் கூறுதற் கியையாமை காண்க. பிறர் (சேரர்க்கு மருமக்கட்டாயங் கூறினர்) கருத்துப் படி நோக்கின் கோப்பெண்டு, என்றுதான் பொருள் கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/155&oldid=731309" இலிருந்து மீள்விக்கப்பட்டது